பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

கப்பலோட்டிய தமிழன்

தெய்வத்தன்மை ஆகியவற்றை அவர் அற்புதமாக தெளிவுபடுத்தியுள்ளார். படித்து உணர்க!

இவ்வளவு அரிய ஆற்றல்கள் சிதம்பரம் பிள்ளையிடம் ஆமை போல் அடங்கி, அரசியல் புரட்சி மட்டுமே தலை தூக்கி மக்களை உணர்ச்சியின் உருவங்களாக, எஃகு உள்ளங்களாக மாற்றிடும் திறமையின் எழுச்சியும் அவரிடம் அமைந்திருந்ததால்தான் பாரதியார் அவரைத் ‘தமிழகத்தார் மன்னன்’ என்று தனது கவிதையிலே ஏற்றிப் போற்றிப் பாடினார்:

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிதம்பரம் பிள்ளையை ‘ஒப்பே கூற முடியாத செந்தமிழ் அறிவுச் செல்வன்’ என்றார். ஆனால், தேசியத்தைக் கவிதையிலே எளிமையும் அற்புதமுமாகப் பாடிய தாக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, ‘சிதம்பரனாரிடம் வேதாந்த சித்தாந்த மணமே வீசும்’ என்று அவரை ஒரு தத்துவஞானத் தலைவன் என்று நாட்டுக்கு அடையாளம் காட்டினார்!

எல்லாவற்றுக்கும் மேலாக, சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் என்ற தமிழ்ஞானத்தின் தவத்தால், கர்நாடகத்தைச் சேர்ந்த பண்பாளர் பி.ஆர். பந்துலு என்ற ஆசான் ஒருவரின் துணை கொண்டு, உலக நடிப்புக் கலைக்கு அகராதியாக விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளை என்ற நடிப்புச் சிற்பனாக்கி, தேசியக் கவிக்குல வைரமான அமரகவி பாரதியாரின் அற்புத தேசியப் பாடல்களால் தமிழ் மக்களை