இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.உ.சிதம்பரம்
111
மட்டுமன்று, படம் பார்க்கும் உலகச் சுவைஞர்களை உருக வைக்கும் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற திரைக் காவிய அருள் மணத்தை சிலம்புச் செல்வர் தனது தவஞானச் சிலம்பொலியால் ஒலித்துக் காட்டி மறைந்தார்.
இந்த நன்றி காட்டும் பண்பை திரையுலக விஞ்ஞானம் இருக்கும் வரை சிதம்பரம் பிள்ளையின் விடுதலை வீரம் வாழையடி வாழையென கன்றுகளாகும், பலன் வழங்கும் என்பது உறுதி வாழ்க சிதம்பரனாரின் முத்தமிழ் அதிவீரம்! செயலறம்!