பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கப்பலோட்டிய தமிழன்


ஒட்டப்பிடாரத்திற்கு வடக்கே உள்ள எட்டையபுரம் என்ற ஊரிலேதான், மக்கள் கவிஞன் பாரதி தோன்றினார். நாவலர் எஸ்.எஸ். சோமசுந்தர பாரதி பிறந்தார். இத்தகைய பெருமைகளுக்கும், புகழுக்கும் சிகரமாக விளங்கிய சிற்றூரான ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதன் பிள்ளைக்கும், பரமாயி அம்மையாருக்கும் மகனாக, வ.உ.சிதம்பரனார் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று பிறந்தார். அவருடன் நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் பிறந்தார்கள்.

சிறுவன் வ.உ.சிதம்பரம், திண்ணைப் பள்ளிக் கூடத்தில், வீரப்பெருமாள் அண்ணாவி என்ற வாத்தியாரிடத்திலே ஆரம்பக் கல்வியைக் கற்றார். ஆசான் அண்ணாவி விதைத்த தமிழ் வித்து அருகம்புல்போல வேரோடி ஆல் போல விழுது விட ஆரம்பித்தது. ஆங்கில மொழியை வழக்குரைஞர் உலகநாதன் பிள்ளை சிதம்பரம் பிள்ளைக்குப் போதிக்கலானார்!

ஏனென்றால், அக்காலத்திலே ஆங்கிலம் கற்பிக்கும் கல்விக்கூடம் ஒட்டப்பிடாரத்திலும் சரி, சுற்றும் முற்றும் உள்ள முக்கிய ஊர்களிலும் சரி இல்லை என்றே கூறலாம். அதனால் ஆங்கிலம் போதிக்கும் பள்ளியை உலகநாதன் பிள்ளை தனது சொந்த செலவிலேயே ஆரம்பித்தார். தனது மகன் சிதம்பரத்துக்காகத் துவங்கப்பட்ட அப்பள்ளியில் அவர் மகன் ஒருவர் மட்டுமே படித்தார். பிறகு நாளடைவில் அவ்வூர் பிள்ளைகளும் ஆங்கில மொழியைக் கற்க ஆரம்பித்தார்கள்.

அந்தப் பள்ளிப் படிப்பை படித்து முடித்தவுடன் சிதம்பரம், தூத்துக்குடி செயிண்ட்பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் சேர்ந்து