பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

21


அவர் கப்பலோட்டியதற்கு அது மட்டுமே காரணமன்று. தமிழர்களது முன்னோர்களாகிய பண்டைத் தமிழர்கள் கப்பலோட்டிச் செல்வத்தைப் பெருக்கிக் கலைகளை வளர்த்து நல்லரசு நடத்தி வல்லரசுகளாக வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றை மீண்டும், நமக்கெலாம் நினைவுபடுத்திக் காட்டவும் கப்பலோட்டினார் நமது சிதம்பரம் பிள்ளை.

வெள்ளையரை எப்போது விரட்டியடிக்கலாம் என்று சமயத்தை எதிர்பார்த்திருந்தார் வ.உ.சி. இந்நிலையில், ஆங்கிலேயரது ஆட்சி வங்காள மாநிலத்தை இரண்டாக வெட்டி துண்டு போட்டு ஒன்றை முஸ்லீம் வங்காளம், மற்றொன்றை இந்து வங்காளம் என்று பிரித்துப் பெயரிட்டது.

மண்ணைத் துண்டு போடும் இந்த மாநிலப் பிரிவைச் செய்தவன் லார்டு கர்சான் என்ற வங்கக் கவர்னர்.

ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த இந்து முஸ்லீம்களைப் பிரித்து வேற்றுமையை உருவாக்கவே கர்சான் இவ்வாறு செய்தான். ஆனால், வங்க மக்கள் ஆங்கிலேயரின் இந்த ஆட்சிச் சூதினை, வஞ்சகத்தைப் புரிந்து கொண்டார்கள். அதனால், பிரிவினையை எதிர்த்து இந்திய மக்கள் போராடத் துவங்கிவிட்டார்கள்.

இந்த வங்கப் பிரிவினைப் போராட்டம் இந்தியா முழுவதும் பரவியது. அந்நிய துணிமணிகளைப் பகிஷ்காரம் செய்தார்கள். மக்கள் மலைமலையாக அவரவர் ஆடைகளையும் கொண்டு வந்து குவித்து நெருப்பு வைத்து எரித்தார்கள். இந்தத் தீ “முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே, யானுமிட்ட தீ மூள்க மூள்கவே” என்று