பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கப்பலோட்டிய தமிழன்

வேகத்தால் வெள்ளையன் எதிர்ப்புக்கு விசிறிக் கொண்டிருந்தார். அந்த உணர்ச்சிகளிலே வார்த்த எஃகு ஆயுதங்களைப் போல மக்கள் சூடேறிக் கொண்டிருக்கும் போது, வந்தே மாதரம்! பாரத்மாதா வாழ்க! வந்தே மாதரம்! என்ற முழக்கங்களை விண் அதிர, மண்ணதிர மக்கள் முழக்கமிட்டவாறே கலைந்து சென்றனர். திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமே சிதம்பரனார் இட்டதே சட்டமாயிற்று. அவர் சொல்லுக்கு மறுசொல் கிடையாது. சிதம்பரனார் ஓர் ஆணை பிறப்பித்தால், மக்கள் அனலையே விழுங்கிடத் தயாராக இருந்தனர்! அவ்வளவு செல்வாக்கும் சொல்வாக்கும் அவருக்கு மக்களிடையே அப்போது இருந்தது.