செக்கிழுத்தார் சிதம்பரம்!
சிதம்பரனாருக்குரிய ஆறாண்டுக் கடுங்காவல் தண்டனையை, அவர் கோயம்புத்துர், கண்ணனூர் சிறைகளில் கோரமாக அனுபவித்தார். அப்போதெல்லாம் தமிழ்நாட்டுச் சிறைகளில் தேசபக்தர்கள் அதிகமாக தண்டனை அனுபவிப்பது கிடையாது. அதனால் சிதம்பரம், சிவா போன்றவர்கள் சிறைகளில் தன்னந்தனியாகவே அவரவர் தண்டனைக் காலங்களைக் கழித்து வந்தார்கள்.
சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளுக்கு எந்தவிதமான வசதிகளும் செய்து தரும் வழக்கம் இல்லை. திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன்களைப் போன்ற சமூக விரோதிகளுடனே சரி சமமாகச் சேர்ந்தே அவரவர் தண்டனைகளை அனுபவிப்பது என்பது வழக்கமாக இருந்தது.
இத்தகைய சமூக விரோதிகள் சிறையுள்ளே என்னென்ன துன்பங்களை, கொடுமைகளை, சித்ரவதைகளை அனுபவிக்கின்றார்களோ அவற்றையெல்லாமே அரசியல் கைதிகளும் சேர்ந்தே அனுபவிக்கும் கொடுமை அரசியல் கைதிகளுக்கும் இருந்தது. அதனால், சிதம்பரம் பிள்ளையும் சிறைச்சாலையில்