68
கப்பலோட்டிய தமிழன்
உடனே சிறையினுள்ளே இருந்த அபாயமணி ஒலித்தது. இடைவிடாமலும், விட்டு விட்டும் மணி அலறிக் கொண்டே இருந்தது. கைதிகளில் பலர் பூட்டுக்களை உடைத்துக் கொண்டு சிறைக்கு வெளியே ஓடினார்கள். அந்த நேரத்தில் ஏராளமான ரிசர்வ் போலீசார் கார்களில் வந்து குவிந்தார்கள். சுட்டார்கள் கைதிகளை ஒரு கைதி பிணமானார். ஆனால், அந்த ஜெயில் அதிகாரி, அதாவது சிதம்பரம் பிள்ளையை அவமரியாதையாக எண்ணி ராமன் என்ற கன்விக்ட் கைதியைச் செருப்பாலடிப்பேன் என்று கூறிய ஜெயிலரை கைதிகள் பயங்கரமாகத் தாக்கி, பலத்த காயப்படுத்தி விட்டார்கள் அந்த ஜெயிலர் உடல் தேறிட சில மாதங்களாயின.
இந்த கலவரத்திற்கு யார் காரணம்? என்று கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிதம்பரனார் கைதிகள் பக்கமே நியாயம் இருப்பதாக சாட்சி கூறினார். ஜெயில் அதிகாரி செய்த கொடுமைகளும், நடத்திய அவமரியாதைச் செயல்களும், கைதிகளிடம் அவர் காட்டிண ஆணவ அகம்பாவ ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகளுமே காரணம் என்று சிதம்பரனார் சாட்சியமளித்தார். இந்த சான்றளிப்புக்குப் பிறகு சிதம்பரம் பிள்ளையைக் கண்ணனூர் சிறைக்கு மாற்றிவிட்டது வெள்ளையர் அரசு.