இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
74
கப்பலோட்டிய தமிழன்
சாட்டினார்கள். உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு இந்த வழக்கு சென்றது. விசாரணையில் ஒன்பது பேர் தண்டனை பெற்றார்கள். ஐவர் விடுதலை ஆனார்கள். இவ்வாறாகப் புரட்சி மனப்பான்மை வாலிபர்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் வெள்ளையராட்சியை எதிர்த்து இரகசியமாக சுதந்திரப் பணியைச் செய்து வரும் சூழ்நிலை உருவானது.