பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11. வ.உ.சி. விடுதலையானார்
ஒரே ஒரு தமிழன் வரவேற்றார்

சிதம்பரனார் வெள்ளையரது வாணிபத்தை எதிர்த்துக் கப்பலோட்டியது ஒரு குற்றம் அனுமதியின்றிப் பொதுக்கூட்டம் நடத்தியது இரண்டாவது குற்றம்: பாமர மக்களை ‘வந்தே மாதரம்’ என்று முழக்கங்களை எழுப்ப வைத்தது மூன்றாவது குற்றம் என்ற மூன்று குற்றங்களைச் செய்தார் என்ற காரணங்களைக் காட்டி வெள்ளையராட்சி அவருக்கு நாற்பது ஆண்டுகள் தீவாந்தர தண்டனையை விதித்து, அந்த தண்டனையை அந்தமான் தீவுக்குச் சென்று அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

சுப்பிரமணிய சிவா சிதம்பரம் பிள்ளையுடன் சேர்ந்து ராஜத்துரோகக் குற்றம் செய்தார் என்று அவருக்கும் பத்தாண்டு தீவாந்தரம் தண்டனை அளித்தது ஆங்கிலேயர் ஆட்சியின் நீதிமன்றம்.

சிதம்பரனார் நண்பர்கள், வெள்ளையர் தீர்ப்பை எதிர்த்து லண்டனிலுள்ள பிரீவிகெளன்சில் நீதிமன்றம் வரை சென்று, இறுதியாக அந்த தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இந்த சிறைத் தண்டனையை சிதம்பரம் பிள்ளை