பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

கப்பலோட்டிய தமிழன்

யாரும் அப்போது பிள்ளை முன்பு வாய் திறந்து பதில் பேசவில்லை. ஆனால், வரதராஜ முதலியார் என்ற நாமக்கல் பிரதிநிதி, ஏன் காந்தியடிகளை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன துரோகம் செய்தார் மகாத்மா உங்களுக்கு?" என்று கோபமாகவே கேட்டார்.

கோபப்படாதீர் முதலியாரே ஒரு தீர்மானத்தின் மீது ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வாக்கு சேகரிக்கும் உரிமை உமக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர் என்று கூறிவிட்டு அவரும், உடன் வந்த நண்பர்களும் அடுத்த ரயில்வே நிலையத்தில் இறங்கி வேறொரு பெட்டிக்குப் போய் விட்டார்கள்.

அடுத்த பெட்டியில் ராஜாஜி, டாக்டர் ராஜன், ஜியார்ஜ் ஜோசப் முதலியவர்களுடன் சிதம்பரம் பிள்ளையும் பேசிக் கொண்டிருந்தார். தான் ஒரு தலைவன். பிரபல கிரிமினல் வக்கீல். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் ஓட்டியவன், கடும் சிறைத் தண்டனைகளை அனுபவித்துவிட்டு சிறை மீண்ட முதல் பெருந்தியாகி, தேசத்திற்காகப் பல கஷ்ட நஷ்ட தியாகங்களைச் செய்த முதல் தியாகமூர்த்தி. அங்கே பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ் பிரதிநிதிகளை விட பல சிறப்புகளைப் பெற்றவன் என்ற மனக்கர்வமோ, அரசியல் தியாகப் பகட்டோ, பந்தாவோ, அகந்தையோ, ஆணவமோ எள்ளளவும் இல்லாத சாதாரண எளிய ஒரு குழந்தையைப் போல அனைவரிடமும் குழைந்து பேசிக் கொண்டிருந்ததை அந்த பெட்டியிலே வந்து ஏறிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்!

‘வாரும் பிள்ளைவாள்’ என்று சிதம்பரம் பிள்ளை நெடுநாள் பழகினவர் போல நாமக்கல்லாரை அழைத்துப்