பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

83

பேசியதை கண்ட ராஜாஜி, “ராமலிங்கம் பிள்ளையை உமக்குத் தெரியுமா?” என்று சிதம்பரம் பிள்ளையைக் கேட்டார். “ஓ! நன்றாகத் தெரியும், இதோ பாருங்கள் அவர் எழுதிய கவிதையை” என்று தன்னிடமிருந்த பத்திரிகையைப் பிரித்துக் காட்டினார். அதைக் கண்ட ராஜாஜி! “ஒ இதுவா? உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று தானே” என்றார்:

“நானும்தான் திலகர் இறந்தபோது இரங்கற் பாடல்களைப் பாடினேன், அவை பிள்ளை பாடலைப் போல அமையவில்லை. உண்மையான கவித்திறம் எல்லோருக்குமா வரும்?” என்று ராஜாஜியைப் பார்த்து சிதம்பரனார் கூறியதைக் கேட்ட ராமலிங்கம் பிள்ளை மெய்மறந்து போனார் உடல் புல்லரித்தாராம்!

ஒரு சிறந்த தேசபக்தர், தியாக மூர்த்தி, திலகர் பிரானுடைய தலையாய சிஷ்யர்களிலே சிறப்புற்ற தென்னாட்டுத் திலகர், பாரத தேவியின் விடுதலைக்காகப் பல கொடுமைகள் நிறைந்த சிறைவாசத்தைச் செய்து அருந்தவமாற்றிய அண்ணல், ஆழ்ந்த தமிழ் ஆராய்ச்சி பெற்ற அறிஞர். நம்மை எவ்வளவு பெருமையாக உயர்வாக ராஜாஜியிடம் பாராட்டியுள்ளாரே என்ற உணர்ச்சி என்னைப் புல்லரிப்பு படச் செய்துவிட்டது என்று நாமக்கல் கவிஞர் தனது நூலில் ஒன்றான ‘தேச பக்தர் மூவர்’ என்ற நூலிலே எழுதியுள்ளார். ராஜாஜி இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த போது இந்த சம்பவத்தைச் சென்னை செயிண்ட் மேரிஸ் மண்டபத்திலே நடந்த வ.உ.சி.விழாவிலே பேசினார். அத்தகைய ஒரு பேரறிவாளன் காந்தி பெருமானை எதிர்த்து வாக்கு கேட்கவில்லை. அவரது ஒத்துழையாமை என்ற திட்டம், சரியான முறையல்ல என்பதை உணர்த்தி, காந்தியடிகளது தீர்மானத்தைத் தோற்கடிக்கவே