வ.உ.சிதம்பரம்
89
இஞ்சினுக்கு முன் தண்டவாளத்தில் குதித்து விட துடித்துக் கொண்டிருந்தார்கள்.
எங்கள் வண்டியைச் சேர்ந்த சிலர், சிதம்பரம் பிள்ளையிடம் சென்று இந்த முரட்டு முயற்சியை விட்டு விடுமாறு கெஞ்சிக் கேட்டார்கள். பலிக்கவில்லை. சேலம் விசயராகவாச்சாரி திலகரைப் பின்பற்றும் ஒரு தீவிரவாத தேசபக்தர். சிதம்பரமும் திலகர் பக்தர், அதனால் விஜயராகவாச்சாரி சொன்னால் அவர் கேட்பார், போராட்டத்தைக் கைவிடுவார் என்று ராஜாஜி நாகராஜ ஐயரிடம் கூறியதைக் கேட்ட சிலர், வ.உ.சி.யை விஜயராகவாச்சாரியார் அழைப்பதாகக் கூறி அவரை அழைத்து வந்தோம். உடனே ராஜாஜி வலிய விசயராகவாச்சாரியாரிடம் மிகவும் விநயமாகப் பேசியதன் விளைவாக, சிதம்பரம் பிள்ளையிடம் விஜயராகவாச்சாரியார் சாதுர்யமாகப் பேசினார். பிள்ளையும் மதித்தார். அதனால், மெயில் முன்னால் போயிற்று. நாங்கள் பின்னால் போனோம்.
இந்த சம்பவத்தில் சிதம்பரம் பிள்ளையினுடைய ஆண்மையையும், வெகுவிரைவில் கட்சி சேர்த்துவிடக் கூடிய ஆற்றலையும், எதிர்ப்புகளுக்கு அஞ்சாத அவரது துணிச்சலையும், தலைவனுக்கு உடனே தலை வணங்கும் தளபதியின் தன்மையையும் நான் கண்ணாரக் கண்டேன்.
எல்லாரும் கல்கத்தா போய்ச் சேர்ந்த பின்பு, நாங்கள் தங்கியிருந்த இடத்தில் சிதம்பரம் பிள்ளை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் காந்தியடிகளது தீர்மானத்திற்கு விரோதமாக ஓட்டு சேகரித்தார். அவர் காந்தியடிகள் முன்பு விசேஷ சபையில் தீர்மானத்தை எதிர்த்துப் பேசும் போது,