இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.உ.சிதம்பரம்
93
அந்த ஆன்ம உணர்ச்சி சமுதாய வாழ்க்கையில் அற்றுப் போகாமல் இருக்கச் செய்வதுதான் மகாத்மாக்களின் வேலை. அந்த வேலையினால்தான் மனித சமூகம் மிருக வாழ்க்கைக்கு மாறுபட்டதாக இன்னும் இருந்து வருகிறது.
கல்கத்தாவில் காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டத்திற்கு வ.உ.சி. மறுப்புத் தெரிவித்ததோடு நில்லாமல், திலகர் மேலுள்ள தீவிரவாதப் பற்றால் அதை எதிர்க்கவும் செய்தார். ஆனாலும், திட்டம் நிறைவேறியதைக் கண்ட சிதம்பரம் பிள்ளையின் அரசியல் வாழ்க்கை அடங்கிவிட்டது. காந்தியடிகளை இனிமேல் எதிர்க்க முடியாது என்றெண்ணி அவர் அரசியலை விட்டே ஒதுங்கிவிட்டார்.