பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



88 கமலாம்பாள் சரித்திரம் தந்திகள் தனித்தனி தங்கள் நாதத்தை தொனிக்கிறது மன்றி மற்ற தந்திகளுடைய நாதத்தையும் எப்படி சோபிக்கச் செய்கின்றனவோ அதுபோலத் தனித்தனி தத்தம் அழகால் விளங்கியதும் தவிர மற்றுள்ள அங் கங்களின் அழகையும் எடுத்துக் காட்டின. தெய்வீகப் புலவர்களாகிய கம்பர் முதலியோருடைய கவிகளில் எப்படி உள்ள பதத்தை எடுத்து வேறு எந்தப் பதம் போட்டாலும் ரசம் குறைந்து போமோ அதுபோல லட்சுமியினுடைய அங்கங்களில் எதையும் சிறிது மாற்றினாலும் அழகுக்குக் குறைவே தவிர விர்த்தி கிடையாது. 'கழுத்து சிறிது நீண்டிருந்தால் நன்றா யிருக்கும் ' 'கால் சிறிது குறுகிக் கை சிறிது பெருத் திருந்தால் ,' என்றிப்படி ஆல் உம் என்ற விகுதிப் பிர யோகங்களுக்கு இடம் கிடையாதபடி அவளுடைய அங்கங்களினமைப்பு அவ்வளவு அழகாயிருக்கும். ஸ்ரீநிவாசனுடைய உருவத்தில் சரீர அமைப்பைக் காட்டிலும் மிருதுத்துவமும் பளபளப்புமே முக்கிய மாய் விளங்கின. சங்கீதத்தில் தியாகய்யர் கிருதிக்கும் இங்கிலீஷ் நோட்டுக்கும் என்ன வித்தியாசமோ அந்த வித்தியாசந்தான் இவ்விருவருடைய சரீரங்களுக்கும் இருந்தது. அவர்களுடைய முகலட்சணத்திலும் இவ் வித வித்தியாசங்களிருந்தன. ஸ்ரீநிவாசன் பேசும் போது அவன் கண்ணின் ஒளி, பார்ப்பவர்களுக்கு பளீர் பளீர் என்று விட்டுவிட்டுப் பிரகாசிக்கும் மின் னல் ஞாபகத்தை உண்டுபண்ணும். லட்சுமி பேசும் போது அவளுடைய வார்த்தைகளின் கருத்துக்குத் தக்கபடி அவளுடைய முகக்குறி அடிக்கடி அழகாய் மாறுவது, தகதகவென்று பலவிதமாய்ப் பிரகாசிக்கும் வயிரக்கல்லை ஞாபகப்படுத்தும். அவள் பேசும்போது அவளுடைய கைகால் செய்யும் அபினயத்தாலும் முகத்தில் உண்டாகும் வேறுபாடாலும் தூரநிற்ப வர்கள் கூட அவள் கருத்தை அறியலாம். அவளு டைய உயர்ந்த உதடுகளும் விசாலமான கண்களும்