பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கல்யாண சந்தடி சேஷ்டை 91 பின்னலுக்கும் லட்சுமி தலைப்பின்னலுக்கும் முடிச்சுப் போட்டுவிட்டாள். ஒளபாசனமானவுடன் நடந்த சேஷ்டையை யறிந்த ஸ்ரீநிவாசன் முடிச்சை அவிழ்க்க எத்தனித்தான். அதற்குள் நாலைந்து பெண்கள் கூடி லட்சுமி கையைப் பற்றி வீட்டின் உள்பக்கம் இழுக்க, ஸ்ரீநிவாசன் முடிச்சை அவிழ்க்கக் கூடாததுமன்றி அவனும் உள்ளே இழுக்கப்பட்டான். அவன் அதைத் தடுக்க என்ன முயன்றும் முடியவில்லை. அந்த விளை யாட்டுப் பெண்கள் சுண்டிச் சுண்டி இழுக்கும்போது அவன் : லட்சுமிமேல் மெதுவாய்ப் பலமுறை தாக்க நேரிட்டது. இவ்விருவரும் இப்படி ஒருவர்மேல் ஒருவர் படும்போது எல்லாரும் கொல் என்று சிரித் தார்கள். இதற்குள் ஏகக்கூட்டம் கூடி விட்டது. வந்த பெண்டுகளாவது முடிச்சை அவிழ்த்தார்களா? அது வும் இல்லை. எல்லாருமாய் ' அப்படித்தான் இழு, இந்தா இந்த உள்ளே இழுத்து இருவரையும் விட்டுக் கதவைச் சாத்திப்போடலாம். இங்கு அகப்பட்டுக் கொண்டாரையா விட்டலபட்டர், அகப்பட்டுக் கொண்டார்! என்றிப்படிக் கூவினார்கள். சில ஸ்திரீகள் ஸ்ரீநிவாசனைச் சுற்றி ' மாப்பிள்ளை, மாப்பிள்ளை, மண் ணாங்கட்டி தோப்பிலே ............' என்று குதித்துப் பாடி னார்கள். ஒருத்தி பின்புறமாக வந்து அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்து 'மாப்பிள்ளை அழாதேயுங்கள் ; வேண்டாம், இதற்காக அழுவார்களா' என்றாள். இன் னொருத்தி ' விட்டுவிடுங்கடி பாவம் அழுகிறான், குழந்தை, கோந்தை' என்றாள். மற்றொருத்தி 'சிரி ஒக்கச் சிரித்தார்க்கு வெட்கமில்லை, பொம்மனாட்டிகளை மீறிக் கொண்டுபோக முடியவில்லை, சிரிப்பு வேறேயா!' என்றாள். இன்னொருத்தி ' மாப்பிள்ளை வேஷ்டியைப் பார் அத்தைப்பாட்டி புடவைபோல' என்றாள். இவர்கள் இப்படிப் பரிகாசம் செய்தது ஸ்ரீநிவாச னுக்கு சகிக்க முடியவில்லை. ஆயினும் அத்தனை அழ கான யௌவன பருவமான பெண்கள் இவ்வளவு உல்