பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அவருக்கு முடிச்சவிழ்க்கத் தெரியாது 93 லாய் ராமண்ணாவாத்தியார் வந்தார். வந்தவுடன் ஸ்ரீநிவாசன் அவரைப் பார்த்து முடிச்சை அவிழ்க்கச் சொல்ல, அந்தப் பெண்கள் ' அவருக்கு முடிச் சவிழ்க்கத் தெரியாது. (முடிச்சவிழ்க்கி என்றால் திருடனென்றும் அர்த்தம்.) தாத்தா அவிழ்த்தீரா பார்த்துக்கொள்ளும்! தொந்தி பத்திரம்!' என்று சொல்லி அவரை முடக்கிவிட்டார்கள். (நெடுநாள் சிரமப்பட்டு சம்பாதித்த தொந்தியை இழக்க அவ ருக்கு இஷ்டமில்லை.) கொஞ்ச நேரத்திற்கெல்லாம் முத்துஸ்வாமி அய்யரே வந்துவிட்டார். அவர் வந்த வுடனே நடக்கும் சங்கதியை கிரஹித்துக்கொண்டு ஸ்ரீநி வாசனுடைய குணத்தைக்கண்டு மகிழ்ந்து அவனிடம் வந்து முடிச்சை அவிழ்க்கவே, அந்தப் பெண்களெல் லாம் அவிழ்க்காதேயுங்கள் மாமா, அவிழ்க்காதேயுங்கள் அப்பா ' என்று சொல்ல, அவர் சிரித்துக்கொண்டு 'பொல்லாத குட்டிகள் அம்மா ; பொங்கல் சாப்பிட வேண்டாமா, நாழிகையாகவில்லையா? பலமாபோட் டிருக்கிறாள் முடிச்சை, யாரடி போட்டது' என்று சொல்லிக்கொண்டே முடிச்சை யவிழ்த்துவிட்டார். உடனே ஸ்ரீநிவாசன் தன் ஜாகைக்குப் புறப்பட்டான். அந்தப் பெண்கள் 'அறுத்துவிட்டதும் கழுதை எடுத்து விட்டதாம். ஓட்டம்' என்று சொல்லிக்கொண்டு அவனை வாசல்வரை துரத்திவிட்டு உள்ளே சிரித்துக் கொண்டு ஓடினார்கள். அன்று மத்தியானம் சாப்பாடான பிறகு ஸ்ரீநி வாசன் சுப்பராயனுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஒரு பெண் ஓடிவந்து ' இந்தா உன் பெண்டாட்டி காகிதம் கொடுத்தாள்' என்று சொல்லி, ஒரு கடிதத்தை அவன் மடியில் போட்டு விட்டு ஓடிவிட்டாள். அதை அவன் வெகு ஆவலுடன் எடுத்தான். அது முரட்டுக் காகிதத்தில் எழுதப்பட் டிருந்தது. வரிகள் வெகுகோணலாயிருந்தது மின்றி