பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கல்யாண விமரிசை 97 தியக்காரக் குட்டிகளா' என்று கோபிக்க, அவர்கள் ஒருவர் ஒருவராய் முகத்தில் துணிபோட்ட வண்ண மாய் அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டார்கள். ஸ்ரீநிவாசனும் சாதத்தை அப்படியே வைத்துவிட்டு மூக்கைச் சிந்திப்போட்டு கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே சென்றான். கல்யாண விமரிசையைப்பற்றி விஸ்தரிப்பதனா வசியம். ஜனங்கள் காலை மாலை வெளியே போகும் போது வரும்போதெல்லாம் இவ்வளவு சிறப்பான கல் யாணம் கண்டதுமில்லை கேட்டதுமில்லையப்பா, அட்டா பேஷ் என்ன விமரிசை, என்ன விதரணை' என்று கொண்டாடிய வண்ணமாய் இருந்தார்கள். அந்தப் பிரபஞ்சமுழுவதும் முத்துஸ்வாமி அய்ய ருடைய கீர்த்திமயமாயிருந்தது. நாலைந்து டிப்டி கலெக்டர்கள், பத்துப் பதினைந்து தாசில்தார்கள், இரு பது முப்பது சிரஸ்ததார்கள், நாற்பதைம்பது ஸப் மாஜிஸ்ட்ரேட்டுகள், நூறு நூற்றைம்பது கோர்ட்டு உத்தியோகஸ்தர்கள், இருநூறு முந்நூறு குமாஸ்த் தாக்கள், ஐந்நூறு அறுநூறு வைதீகர்கள் என்றிவ்வி தம் ஆயிரக்கணக்காய் நானாவித ஜனங்களும் கூடி யிருந்தார்கள், முன்னமே சொல்லப்பட்ட பெரிய வைத்தி, ராகவய்யர் முதலிய வித்வான்கள் தவிர தற் செயலாய் அந்தப் பிரதேசத்திற்கு வந்திருந்த தஞ்சா வூர் சமஸ்தான வைணீகர் (வீணை வாசிப்பவர்கள் ) மகாவித்வான் சல்லகாலி (தென்றற்காற்று) கிருஷ் ணய்யரவர்களும், ராஜதானி முழுவதும் பிரக்யாதி பெற்ற ராமதாஸ் விகடகவியும் கல்யாணத்திற்கு வர வழைக்கப்பட்டார்கள். பெரிய வைத்தியும் ராகவய் யரும் போட்டிபோட்டுப்பாட, ராஜலட்சுமியாட, கிருஷ்ணய்யர் வீணை வாசிக்க, ராமதாஸ் விகடம் செய்ய, முத்துஸ்வாமி அய்யரகத்து கல்யாணப்பந்தல், தும்புரு நாரதர் பாட, ஊர்வசி திலோத்தமையாட