பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'எப்போ வருவாரோ எந்தன் சாமி' 103 சலுக்கும் அளவு சங்கையில்லை. அவர் கல்யாணத் திற்கு நாலுநாளைக்கு முன் வீட்டுக்குப் போனவர்தான். அப்புறம் அந்தப் பக்கமே திரும்பவில்லை. கல்யாணம் முடியும் வரைக்கும் அவருக்கு வீட்டுக்குப் போக வேண்டிய அவசியமுமில்லை, பொன்னம்மாளுடைய தயவும் தேவையில்லை. ஆதலால் அவள் தன்னை வீட் டுக்கு வரும்படி என்ன ஜாடைகள் செய்தபோதிலும் அவைகளை யெல்லாம் அவர் பாராதவர்போல் சும்மா இருந்துவிட்டார். அவளும் சற்று அவசரமாய் வந்து போகும்படி சுமார் ஆயிரம் பேரிடம் சொல்லியனுப்பி னாள். இவர் போகவேயில்லை. ஆனாலும் அவளிடத் தில் பயம் பயந்தான். ஒருதரம் அகப்பட்டுவிட்டால் தப்பிக்கிறது அப்புறம் அந்த ஜன்மத்திற்கு இல்லை யென்று அவருக்கு நன்றாய்த் தெரியும். எங்கே அவள் வந்துவிடப் போகிறாளோ என்று அவர் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டேயிருப்பார். வருகிறாளென்று தெரிந்ததோ உடனே எதோ ஒரு பெரிய காரியம் பார்ப்பவர்போல வெகு அவசரமாகப் போய்விடுவார். அவள் உள்ளே வந்துவிட்டால் இவர் வெளியே போய் விடுவார். அவள் வெளியே வந்துவிட்டால் இவர் உள்ளே போய்விடுவார். அவள் வருகிறாளென்று தெரிந்தால் இவர் தனியே யிருக்கிறதேயில்லை. (என்ன செய்துவிடுவாளோ என்று பயம் பாவம்!) ' அடா ராமசாமி, சுப்பண்ணா ' என்று ஏதாவது ஒரு பேரைச் சொல்லி யாரையாவது கூப்பிட்டுக்கொண்டு கூட்டத்தின் மத்தியில் போய் ஒளித்துவிடுவார். இவர் இப்படி ஓடி ஒளிவதைக் கண்ட சில போக்கிரிப் பையன்கள் பொய்யாவது பொன்னம்மாள் வருகிறாள் என்று சொல்லி வைக்கிறது. இவர் புலி வருகிறது என்று கேட்டு ஓடிய ஆட்டிடையன் கதையாக விழுந் தெழுந்து ஓடுகிறது! இப்படி அவள் பெயருக்கே பயந்து ஓடி ஒளித்ததால் அவள் அவரை என்ன தந்திர மாய் வெருட்டி வெருட்டி வேட்டையாடியும் அவர்