பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நயவஞ்சக நளினம் 107 | குச் சமானம் நாம்தான் என்று பொழுது போக்கு கிறது. ஆயிரமிருந்தாலும் உங்கள் முத்தண்ணா , நான் ஒன்றும் சொல்லப்படாது, பொன்னண்ணா! ஓடுகிற வனைக் கண்டால் தூரத்துகிறவனுக்கெளிது என்றாற் போல் அவர் ஐயர்வாள். கால்மேல் கால் போட்டுக் கொண்டு " அடே சுப்பிரமணியா இந்தா அந்த வெற் றிலை பாக்குத் தட்டை எடுத்துக்கொண்டுவா" என்று அதிகாரம் பண்ணிச் சட்டமிடுகிறது. (அவர் முகத் தில் கையால் இடித்துக்கொண்டு) இது ஏமாளம் பரிசாரகப்பயல் போல அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி வேலை செய்கிறது. கூப்பிட்டாற்கூட தேகம் தெரிகிறதில்லை. நான் என்ன சாதிக்கப்போகிறேன், அண்ணாவாவது பணக்காரர் ' என்று சொல்லிவிட்டு அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு தன் முகத்தை அவர் முகத்துக்குச் சமீபத்தில் வைத்துக்கொண்டு வெகு நளினமான பார்வையுடன் 'அவர் சொத்து முழு வதும் உங்களுக்குத்தான் கொடுக்கப் போகிறாராமே! அவர் பெண்ணுக்குக்கூட இல்லையாம், எல்லாம் உங்களுக்குத்தானாம்' என்றாள். அந்த ராட்சஸியி னுடைய வார்த்தை நமக்கு கர்னகடூரமா யிருந்தாலும் சுப்பிரமணியய்யருக்கு தேவகானம் போலவும் அமிர்த பானம் போலவும் இருந்தது. அவளுடைய நெருப்பு மழை ஓய்ந்தவுடன் அவர் நிரம்பச்செல்வமாய் ' அடி போடி பைத்தியக்காரி நீ என்னத்தைக்கண்டாய், எங் களண்ணாவுக்குச் சமானம் இந்த பூலோகத்தில் கிடைக்குமா' என, பொன்னம்மாள் ' ஐயோ போகட் டும், இப்படி யார் சொல்லப்போகிறார்கள், கிடக்கிறது. பாலைச் சாப்பிடுங்கள்' என்று சொல்லிவிட்டு 'அண்ணா மயக்கமா இப்படி ஆட்டி வைக்கிறது. வா, வா, இன்றையோடு சரியாகப்போய் விட்டது. இனிமேல் இப்படிச் சொல்லுகிறதைப் பார்ப்போம்' என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டு மருந்து கலந்து தாயாராய் வைத்திருந்த பாலை எடுத்துவந்து கீழே