பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



112 கமலாம்பாள் சரித்திரம் இரவுக்கு அந்த வெளிச்சம் பயங்கரமாயும் இருந்தது. அந்த சமயத்திற்கென்று ஓர் விபரீதக்காற்று ஊர்ப் பக்கமாய் வீசியடித்தது. நெருப்புக்கங்குகள் - ஆகா யத்தில் அங்குமிங்கும் சஞ்சரிக்கத் தலைப்பட்டன. அவ் வூர் முழுவதும் அக்கினி பகவானுக்கு அவிர்ப்பாகமாய் விடும் போலிருந்தது. காற்றும் நெருப்பும் ஊரைச் சூரைகொள்ள சித்தமாயிருந்தன. பெரிய பெரிய நெருப்புக்கற்றைகள் பட்டாளம் பட்டாளமாய் வீடு கள் எங்கே எங்கே யென்று வெகு ஆவலுடன், விசா ரித்துக்கொண்டு கால தூதர்களைப்போலக் கிளம்பி நட்சத்திரக்கூட்டங்கள் போல உதிர்ந்தன. ஊர் முழு வதும் ஆண்பெண் அடங்க அலறிக்கொண்டெழுந் தனர். கிழவிகளெல்லாம் 'அடா பாவி, இப்படியுந்தான் உண்டா' என்று கன்னங்களில் விரலை வைத்து ஆச் சரியப்பட்டார்கள். கிழவர்கள், 'சண்டாளப் பறப்ப யல்கள் ஊர்கெட்டுப்போய்விட்டது அனர்த்தம் பிடித்திருக்கிறது' என்று அவலித்தார்கள். பாதித் தூக்கத்தில் எழுப்பப்பட்ட பையன்கள் ஒன்றுந் தோன்றாமல் பிரமித்து நின்றார்கள். ஸ்திரீகள் கங்கு. கள் அங்குமிங்கும் பறப்பதைக்கண்டு தாங்களும் அல றிக்கொண்டு அங்குமிங்கும் பறந்தார்கள். புருஷர் கள், சிலர் அதைவாங்கிச் சமீபத்திலுள்ள கூரை வீடு களுக்கு அபிஷேகம் செய்தார்கள். சிலர் எதிர்த்து வரும் கங்குகளைத் தடிகளைக்கொண்டு யுத்தஞ்செய்து கொன்றார்கள். சிலர் தடபுடலாக கூரைகளைப் பிரித் தெறிந்தார்கள். இப்படி ஊர் முழுவதும் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கையில் நல்ல வேளை யாய்க் காற்றமர்ந்தது, கங்கு அடங்கிற்று, அக்னி ஜ்வாலை குறைந்தது. வைக்கோற்போரின் மேற்பாகம் கருகிப் போய்விட்டதாதலால் கங்குகள் பறக்காது - கங்கு - கற்றை