13 இருட்டு ராஜா. ஓடிவந்த மனிதர்கள் வந்த வேகத்தால் மேல் மூச் சுக் கீழ்மூச்சுவாங்க இரண்டு நிமிஷம் வரையில் ஒன் றும் பேசக் கூடவில்லை. அவர்கள் வாய் திறந்து வந்த காரியத்தைச் சொல்லும் வரையில் அங்கிருந்தவர்க ளுடைய பிராணன் அவர்களிடத்திலில்லை. கடைசி யாய் சுப்பிரமணியய்யர் வீட்டில் திருடினவன் பேயாண்டித் தேவனே என்றும், அவன் போகும் வழி யில் சிறுகுளத்திற்கு ஆறு மைலுக்கப்பாலுள்ள கல் லாபட்டிக் கணக்கன் குப்பாபிள்ளை அவர் மாட்டை அடையாளங்கண்டு ஆட்களைத் திரட்டிக்கொண்டு பேயாண்டித் தேவனை வழிமறித்துக் கொண்டிருக்கிறா ரென்றும், முத்துஸ்வாமி அய்யரைப் போலீஸ்காரர்க ளுடன் குப்பாபிள்ளை கூட்டிவரச் சொன்னாரென்றும் அனேக உளறல், குழறல், கேள்வி, உத்தரம், ஆட்சே பனை, சமாதானங்களுக்குப் பிறகு வெளியாயிற்று. உடனே சிலர் 'பேயாண்டித் தேவன் தான், நான் தான் சொன்னேனே, வேறு யார் இவ்வளவு தைரியமாகச் செய்வார்கள்' என்றார்கள். சிலர் 'பேஷ் பேயாண்டித் தேவன் அகப்பட்டானடாப்பா' என்றார்கள். 'பேயாண்டித்தேவன்' என்பவன் வெகு பிரபல மான திருடன். அந்தப் பிரதேசத்துக் கள்ளர்கள் எல் லோருக்கும் அவன் தான் அதிபதி. அவன் தன் கொம்பு வாத்தியத்தை ஊதினானானால் அரை நிமிஷத்தில் ஆயி ரக்கணக்காக அவனுக்குப் படைசேரும். அவன் வய தில் சிறியவன் ஆனாலும், அவனுடைய அசையாத சிந்தையும், அழியாத உள்ளமும், புத்தி விசாலமும் பெருந்தன்மையும், பராக்கிரமமும், வாக்குவல்லபமும்,