பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



118| கமலாம்பாள் சரித்திரம் தென்ன செய்வது? என் மாடு வரப்போகிறது, அதை உன்னாட்கள் பிடிக்கட்டும், வேடிக்கைதானே' என்று சொன்னார். உடனே முன்னிலும் அதிகமான கட்டிய முழக்கங்களுடன் சுப்பிரமணியய்யருடைய இரண்டு மாடுகளும் ஏககாலத்தில் புறப்பட்டன. ஆனால் அவை களுக்கு மனிதர் கூட்டம் லட்சியமேயில்லை. நிரம்ப ஜனங்கள் கூடியிருந்த இடத்தில் அவை வந்து அலட் சியமாய் நின்றன. சிலர் கிட்ட நெருங்க அவர்களைக் குபீரென்று கொம்பால் வாரி ஆகாயத்தில் எறிந்து விட்டன. ஜனங்களும் அவற்றைப் பிடிக்க பல முயற் சிகள் செய்தார்கள். அதிலும், ஜமீன்தாருடைய ஆட்க ளெல்லாம் துணிந்து பின்னிருந்து அந்த மாடுகளிடம் போவது, 'டுர்ரீ' என்று கூப்பிடுவது முதலிய பல தந் திரங்களைப் பண்ணி தலை கீழாக விழுந்து பார்த்தார் கள். கடைசியாய் கண் போனவன், கால் போனவன், கை போனவன் என்ற அழுகைதான் மிஞ்சிற்று. அது முதல் அந்த மாடுகளிடத்தில் ஜனங்கள் கிட்ட நெருங் குகிறதில்லை. 'டுர்ரீ' என்று ஒரு தடவை யாராவது கூப்பிட்டால் அவை திரும்பிப்பார்க்கும். பார்த்தவுடன் எல்லாரும் கதி கலங்கி புலியைக் கண்ட ஆடுகள் போல் ஒருவர் மேலொருவராய் விழுந்தோடுவார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் 'டூர்' என்ற சப்தமும் அடங்கிப் போய்விட்டது. அந்த இரண்டு மாடுகளும் கம்பீர மாய் இருபுறமும் கடாட்சித்துக்கொண்டு மெதுவாய் வீடு நோக்கிச் சென்றன. ஜெல்லிக்கட்டு முடிந்தது. சுப்பிரமணியய்யருக்கு உண்டான சந்தோஷத்திற்கு அளவில்லை. வீட்டுக்குப் போன பின் பொன்னம்மா ளுடன் தன் பெருமையைச் சொல்லி விட்டுப் பருத் திக்கொட்டையும் தவிடும் தானே யெடுத்து அந்த மாடுகளுக்கு வைத்து உபசாரம் செய்யப் போய்விட் டார். வீட்டுக்குப் போன ஜமீன் தாரோ வெகு கோபத் துடன் தோற்றுப்போன தன் மாட்டை வரவழைத் துப் பறையரை விட்டுத் தன்னெதிரேயே உயிரோடு