பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பேயாண்டி தப்பிவிட்டான் 121 மூக்கன் வண்டி தேடி, மாடு தேடி பயணத்துக்குத் தயார் செய்ய, ஐந்தாறு வண்டிகளும்,ஐம்பது, அறுபது ஜனங்களும், தீவட்டிகள், சுழுந்துகள் சஹிதமாய்க் கல்லாபட்டி மார்க்கமாய்ப் புறப்பட்டார்கள். அங்கே வந்தவுடன் 'பேயாண்டித்தேவன் ஐந்தாறு பேரைக் காயப்படுத்திவிட்டுக் காத தூரம் போய்விட்டான்' என்று கேள்விப்பட்டு எல்லாரும்திகைத்து நின்றார்கள். அப்பொழுது சொக்கன் என்ற ஒரு குடியானவன் அவர்களிடம் வந்து ' நீங்கள் யோசிக்கவேண்டாம், பேயாண்டியை நான் பிடித்துக் கொடுக்கிறேன்' என் றான். அவனே ஜாதியில் கள்ளன் ஆனதால் அவர்கள் அவனிடத்தில் நம்பிக்கையுடன் 'அப்படிச் செய்வாயா னால் உனக்கு நல்ல வெகுமதி தருகிறோம்' என்றார்கள். சிறுகுளத்தில் அன்று இரவு முழுவதும் ஒருவருக்கும் தூக்கம் கிடையாது. ஜனங்கள் எல்லாரும் தீ பிடித்த திருஷ்டாந்தங்களையும் பேயாண்டித் தேவனுடைய பிரதாபங்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பாவம் சுப்பிரமணியய்யரோ, முத்துஸ்வாமி அய்யர் அகத்திலேதானே இருக்கும்படி சொல்லிவிட்டமை யால் அங்கேயே இருந்துகொண்டு தனக்கு நேரிட்ட கஷ்டத்தைக் குறித்து வருத்தப்பட்டுக்கொண்டிருந் தார். அவருக்கு நகை போனதிலும் பணம் போனதி லும் கூட. அவ்வளவு விசனமில்லை. பிரியமாய் வாங் கின உருமால் கட்டிக்காளை போனது அவருடைய பிராணனில் ஒரு பாகம் போய்விட்டது போலிருந்தது. மகாமேரு போலிருந்த அவர் வைக்கோற் போரோ அவருடைய நீர் பெருக்கும் கண்கள் முன்னமேயே கரியாய்ப் போய்க்கொண்டிருந்தது.