பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



14) கள்ளனுக்குள்ளே குள்ளன். இரண்டு மாதத்துக்குப் பிறகு ஒரு கணவாய்க்கு அருகிலிருந்த ஓர் பெரிய ஆலமரத்தின் கீழ் பேயாண் டித் தேவன் பத்துப் பேருடன் உட்கார்ந்திருந்தான். அப்படி உட்கார்ந்திருக்கும்போது பகலில் சுமார் பன் னிரண்டு மணிக்கு ஒரு மனிதனும் ஒரு கிழவியும் அவர்களை நோக்கி வெகு வேகமாய் ஓடி வந்தார்கள். வந்தவர்கள், அந்தக் கிழவி பஞ்சுப் பொதிபோல் தளர்ந்து கிடந்த தன் கிழட்டுச் சதையைத் தூக்கிக் கொண்டு ஓடிவருகிற வேடிக்கையைக் கண்டு சிரித் துக்கொண்டிருந்த பேயாண்டித் தேவனுடைய காலிலே விழுந்து ' எங்கப்பங்கப்பா மகாராசா! நீ தான் காப்பாற்றவேணும், நீதான் எங்குல தெய்வம்' என்று கதறினார்கள். பேயாண்டித் தேவன் ' நீங்கள் யார், என்ன சமாசாரம்' என்று கேட்க, அந்தக் கிழவி , ' சாமி நான் ஏழைப்பட்டவள், ஆயிரங்காலந் தவசு கிடந்து கோவிலுக்குப் போயி கொளத்துக்குப் போயி மரத்தைச் சுத்தி மாட்டைச் சுத்தி வரங்கிடந்து தவசு பண்ணிப் பட்டினி கடந்து பண்ணாத பூசை யெல்லாம் பண்ணி, அப்புறம் துரோபதைக்குச் சாம் பிராணி கொளுத்திக் கருப்பனுக்கு மாடு வெட்டி, ஆடு வெட்டி, கோழி வெட்டி அப்புறம் தருமம் குடுத்து, தானம் குடுத்து, பிராமணாளுக்கு அரிசி குடுத்து, அப்புறம் பஞ்சாங்கக்காரனுக்குத் தவசம் குடுத்து,- என்று வார்த்தை வார்த்தையாக இழுத்து இழுத்துச் சொல்லிக்கொண்டிருக்க, பேயாண்டித் தேவன் ' ஆமாம் அப்புறம் சாப்பிட்டு, அப்புறம் தூங்கி, அப்புறம் கை கழுவி, ஏ ஏ ஏ ' என்று பரி'