பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'சாமி மகாராசாவே என் பேர் சொக்கன்' 123, - - - - - காசம் பண்ணிச் சிரிக்க, எல்லாரும் இடி இடி என்று சிரித்தார்கள். பேயாண்டித் தேவன் ' யார் என்று கேட்டால் இன்னார் என்று சொல்ல ஒரு மாதம் ஆகும் போலிருக்கிறதே' என, அந்தக் கிழவியுடன் கூடவந்த மனிதன் 'சாமி, அவள் அப்படித்தான் பேசிக்கிட்டே கிடப்பாள், அவதான் என்னாத்தா, நான் தான் அவமகன், வந்து அவதான் எங்கப்பனுக்கு மூத்த பெஞ்சாதி' என, அவள் ' இல்லை இன்னொரு சக்காளத்தியிருந்துக் கிட்டிருந்தா அவதான் மூத்தது நானு ரெண்டாவது : அவகளுக்கும் அவளுக்குஞ் சேரவில்லை, எந்நேரமும் சண்டையுஞ் சல்லியமுஞ் சச்சரவுந்தான். அப்புறம் அவர்கள் ' என்று சொல்லிக் கொண்டிருக்க ' நீ யிரடி சும்மா' என்று அவளை யிடித்துத் தள்ளிப் போட்டு 'இவள் வந்து எந்நேரமும் இப்படித்தான். சாமி மகா ராசாவே என் பேர் சொக்கன்' என்பதற்குள், அவள் ' ஒரே மகன், பத்துமாதஞ் சுமந்து பெத்தேன். அவ னும் இடிச்சித் தள்ளரான்' என்று குய்யோ முறை யோவென அழ ஆரம்பித்தாள். பேயாண்டித் தேவன் இவர்கள் ஒன்று மறியாத ஏழைகள் என்று நினைத்து எழுந்திருந்து அவர்களை சமாதானம் பண்ணிச் சமா சாரத்தை சாவகாசமாய் விசாரிக்க, சொக்கன் என்ப வன் தான் ஜாதியில் தெற்குச் சீமைக் கள்ளன் என் றும், அவன் திருடினதற்காக சிறைச்சாலையில் வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து தப்புவித்தோடி வந்துவிட்டதாகவும் போலீஸ்காரருக்குப் பயந்து பேயாண்டித் தேவனுடைய பிரதாபத்தைக் கேள்விப் பட்டு அவனிடம் ஓடி வந்ததாகவும், சொல்லி அவன் காலில் விழுந்து கண்ணீராறாகப் பெருக்க, பேயாண்டித்தேவன் அவனைத் தட்டிக் கொடுத்து ' நீ பயப்படவேண்டாம், உன்னைக் காப்பாற்ற நானாய் விட்டது. உனக்காக என்னுயிரையும் கொடுப்பேன்' என்று கையடித்துக் கொடுத்துப் பிறகு நான் 'போகிற இடமெல்லாம் உன்னைக் கூட்டிப் போகி