பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



124 கமலாம்பாள் சரித்திரம் றேன். நாளை ராத்திரி மல்லாபுரத்தில் கொள்ளை யடிக்கப் போகிறதாக இப்பொழுது தான் பேசி முடித் தோம். உன்னையும் கூட்டிப் போகிறேன். பயப் படாதே, கொள்ளைப் பணம் கிடைக்கும். அங்கே கொள்ளையடித்துவிட்டுத் தோணிமலைக் குகைக்கு வந்து கள்ளுக்கிள்ளு சாப்பிட்டு படுபோடு போட்டு விடுவோம் வா' என்று சொல்லி ' உன் பெயர் என்ன -அப்பன்' என்று கேட்க, அவன் 'சொக்கன்' என்றான். முத்துஸ்வாமி அய்யரிடத்திலும் வைத்தியநாதய்ய - ரிடத்திலும் பேயாண்டித் தேவனைப் பிடித்துக் கொடுத்து விடுவதாய்ப் பேசிவந்த சொக்கன் இவனே. அவன் வழியில் போகிற ஒரு கிழவியைத் தன் தாயா ரென்று கூட்டிவந்து இல்லாத வேஷமெல்லாம் போட, அதை யறியாத பேயாண்டித் தேவன் ' சொக் கண்ணே இங்கே வா அண்ணே, உட்காரப்பேன் பயப்படாதே. கள்ளப்பிள்ளை அழலாமா பாட்டி உட் காரு பாட்டி. போலீஸ் நாய்கள் வரட்டும் வப்பில் கட்டியடிக்கிறேன், என்று சொல்லி சொக்கனுடைய கண்ணீரைத் தன் துணியால் துடைத்தான். மோசக் காரச் சொக்கன் அன்று சாயந்தரமே அந்தக் கிழவி மூலமாக மல்லாபுரம் கொள்ளையையும் தோணி மலைக் குகையிருப்பிடத்தையும் பற்றி சிறுகுளத்துக்குச் சொல்லி யனுப்பிவிட்டான். மறுநாள் மல்லாபுரம் கொள்ளை வெகு மும்முர மாக நடந்தது. ராத்திரி இரண்டுமணிக்கு பேயாண்டித் தேவனும் சொக்கனும் இன்னும் 5-பேர்களுமாய் தோணிமலைக் குகைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த மலை ஓர் சரளைக்கற்காட்டு மத்தியிலிருந்தது. அது சுற்று முற்றும் மனித வாசனையே கிடைக்கப் பெறாது, கொல்லுக் கொலைக்கஞ்சாத சூனியக்காரனுடைய -மனது போல வெந்து கிடந்தது. அதில் 'தாயைப் போல பிள்ளை' என்றபடி சப்பாத்துக்கள்ளியும்