பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அவசர அலங்கோலம் 131 வளவு பிரியம் சுப்புவுக்கு 'ய' என்ற சப்தத்தின் மேல். அரிச்சுவடியில் வேறு எந்த அட்சரமும் அவளுக்கு லட்சியமில்லை. சுப்பு இப்படிப் பிரசங்கம் செய்யும் போது வேம்பு புடவை உடுத்திக்கொண்டிருந்தவள் உடனே ' நிச்சயம்மாவா! பேயாண்டித்தேவனையா !! பிடிச்சுட்டாளா!!! இதோ நானும் வந்துவிட்டே னடீம்மா ' என சுப்பு 'நீ யா (வா) நான் போயேன்' என்று ஓட ஆரம்பித்தாள். அதற்குள் வேம்பு ' அட யெழவே நானும் வந்து விட்டேண்டிம்மா. இதோ ஆச்சரிம்மா (ஆய்விட்டதடியம்மா) ஒரு சித்து சித்துக் கிறதுக்கு எத்தனை நாழி செல்லும் என்று சொல்லி அவசரத்தில் ரவிக்கைகூடப் போட்டுக்கொள்ள சரிப் படாமல் மேலாடையிருக்க வேண்டிய பக்கம் 'கொசா மும், கொசாம்' இருக்க வேண்டிய பக்கத்தில் மேலா டையும் சுற்றிக்கொண்டு புடவையை உடுத்தினதும் உடுத்தாதுமாய் அலங்கோலத்துடன் வெளியே புறப் பட்டு விட்டாள். அடுத்தகத்து நாகு தன் புருஷ னுக்குப் பழையது போட்டுக்கொண்டிருந்தாள். சுப் புவம் வேம்புவும் போய் ஒரு குரல் கூப்பிட்டார்கள். கூப்பிட்டதுதான் தாமதம். நாகு தன் அகமுடை யானைப் பார்த்து மோரு கச்சட்டியிலிருக்கு; குழம்பு அடுப்பிலிருக்கு ; எடுத்து வாத்துக்கட்டும், நான் போரேன், என்று சொல்லி சாதக்கற்சட்டியை மூடா மல் அப்படித்தானே வைத்துவிட்டு பத்துக் கைையக் கூட அலம்பாமல் அப்படியே புறப்பட்டு விட்டாள். அவள் புருஷன், 'அடியே போட்டுவிட்டுப் போடி, அப் புறம் பார்த்துக்கொள்' என்று அதட்ட, அவள் 'இதுக்குவர்ர கோபத்தைப் பார்! நன்னாருக்கு!' என்று மரியாதையாய்ச் சொல்லிவிட்டு (அகமுடை யானுக்குப் பயப்பட அதுதானா சமயம்!) ஒரே ஓட்ட மாய் ஓடிவிட்டாள். அவள் புருஷனுக்கு வந்த கோபத் துக்கு அளவு சங்கையில்லை. ' மொட்டை முண்டை வரட்டும் சொல்லுகிறேன், காலை முறித்துப் போடு