குப்பிப்பாட்டி பெற்ற பிரசாதம் 133 | - - - டும், பவளவர்ணமான தனது திவ்ய மங்கள எச்சிலை கத்தி பிடித்த யுத்த வீரர்கள் மேல் தாராளமாய் சமர்ப் பித்துக்கொண்டும், ஆடிப்பாடித் தாளம் போட்டு அட்டகாசம் செய்து கொண்டும் அலங்காரமாய்ப் பவனிவர, அந்த மகா புருஷனுடைய திவ்ய சேவையை அடையும் பொருட்டு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மதுரையில் மீனாட்சியம்மனுடைய முளைக்கொட்டு உற்சவத்தில் பத்தாவது திருநாள் அன்று அம்மன் கனகதண்டிகையில் எழுந்தருளி வரும் காட்சியைக் காண ஒருவர் மேல் ஒருவர் விழுவதுபோல் விழுந்து தரிசனம் செய்து கிருதார்த்தர்களானார்கள். இவர்கள் எல்லாரிலும் விசேஷ பாக்கியத்தைப் பெற்றவள் குப்பிப்பாட்டி யென்ற மொட்டச்சி. அவள் பேயாண் டித் தேவனைக் காணவேண்டிய ஆசாவேசத்தில் முட்டாக்கு பின்னே விழ மேலாக்கு முன்னே விழ, ஸ்திரீ புருஷன் என்ற பேதத்தை மறந்து, பிராமணன் சூத்திரன் என்ற பேதத்தைத் துறந்து, கூட்டத்திற்கு நடுவே பாய்ந்து பேயாண்டித் தேவனுக்கு சமீபத்தில் போகவே, அவளுடைய அற்புத பக்தியைக் கண்டு ஆச்சரியமடைந்த அத்தேவன் சேகரித்து வைத்திருந்த தனது திருவாயின் அமிர்தத்தை அவள் மேல் அன்பு டன் புரோட்சிக்க, வெள்ளி மயமான அவளுடைய சிராரோமங்கள் அனைத்தும் அரைக்கணத்தில் ரத்ன மயமாய்ப் பிரகாசித்த அற்புதத்தைக் கண்ட ஆங்குள் ளோர் அனைவரும் அடக்கவொண்ணாது ஆர்ப்பரித்து நகைத்தனர். அதாவது (சாதாரணத் தமிழில்) திருட்டுப்பேயாண்டி குப்பிப்பாட்டியின் மொட்டைத் தலையில் காவியேறிய தனது எச்சிலை உழிழ, அத்தலையி லுள்ள வெள்ளை மயிர்கள் எல்லாம் சாயமேறிச் சிவந்த நிறமாயின. இந்த வேடிக்கையைக் கண்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். உடனே குப்பிப் பாட்டி தன்னதிர்ஷ்டத்தைக் கண்டு சந்தோஷிப்பதை விட்டு 'கட்டேலே போவே, நீ நாசமாப் போயிட,