பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பொன்னமமாள் பொறாமை 135 என்று இருந்தவர்கள் எல்லாம் எப்படியோ போய் விட்டார்கள் என்று முணு முணுத்துக்கொண்டு சகிக்க மாட்டாது உள்ளே சென்றாள். அப்போது சுப்பிரமணியய்யர் கூடத்தில் உட்கார்ந்திருந்தார். இவள் முணு முணுப்பதைப் பார்த்து 'என்னடியம்மா எனக்குச் சொல்லப்படாதா' என்று அவர் செல்வ மாய்க் கேட்க, அவள் ' ஆமாம், என்னமோ சொன்னா சொரக்காய்க்கு உப்பில்லேன்னு ; அவர் வந்திருக் கார், அய்யரவாள், ஒங்கண்ணாவாள், முத்தண்ணா வாள், பொன்னண்ணாவாள், ஆனையோடே, குதிரை யோடே. என்னமோ அற்பங்கள் தலைகீழே விழு கிறதுகள். ஜோடன்ன, குடையென்ன, தடி என்ன, ஒன்றும் பார்க்கப்பிடல்லை. நடக்கட்டும், அதிசயமா கள்ளனைப் பிடிச்சுட்டாரில்லையோ என்றாள். அவ ளுக்கு பொறாமை மும்முரத்தில் நகை போன வருத்தம் கூடப்போய்விட்டது. மேலும் அன்று காலமே ஆற்றங்கரையில் கூடிய வம்பர் மகாசபையில் பொன்னம்மாளின் பொறா மையை அதிகரிக்கத்தக்க சில தீர்மானங்கள் செய்யப் பட்டிருந்தன. ஆற்றங்கரையில் கூட அந்த சபை கூடுமோ என்று சிலருக்கு சந்தேகமுண்டாகலாம். நெருப்பும் வைக்கோலும் சேர்ந்தால் தீப்பற்றுவதற்கு யாரைக் கேட்கவேண்டும். அந்த நெருப்பு சந்தர்ப்ப மும் முகூர்த்தமும் பார்த்தா பற்றுகிறது. (இவை களுக்கெல்லாம் ததைவலக்கினம் தான் விதி.) அது போல் சுப்பு கூட்டாளி இரண்டுபேர் எங்கே சேர்ந் தாலும் சரி எப்பொழுது சேர்ந்தாலும் சரி அது வம்பர் மகாசபைதான். மேலும் அந்த சபையின் மீட்டிங் குக்கு ஆற்றங்கரையைப்போல் வசதியான இடம் வேறு கிடையாது. (அதனால் தான் இக்காலத்தும் கூட பெண்டுகள் நதிக்குப் போனால் அவ்வளவு சீக் கிரம் வந்து விடுகிறார்கள்!) ஆற்றங்கரையில் புடவை