பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



136 கமலாம்பாள் சரித்திரம் - - - - தோய்த்துக்கொண்டே சுப்பம்மாள் முத்துஸ்வாமி அய்யர் பேயாண்டித் தேவனைப் பிடித்த விர்த்தாந் தத்தைச் சவிஸ்தாரமாய் அரங்கேற்றிய பிறகு, நீ ஆயிய(ர)ந்தாஞ் சொல்லேம்மா, என்னன்னாலும் எங்க முத்துச்சாமிக்குச் சமானம் வயாது. எங்கே தான் போகட்டுமே, அடி டில்லிக்குத்தான் போகட் டுமே ஜெய்ச்சுக்குண்டு வந்துடுவன். போன காயியம் இல்லென்னு வய்ய (வருகிற)வய(ழ)க்கம் கிடையாது. சுப்பிரமணியனும் கெட்டிக்காயன் தான், என்னன் னாலும் அவனுக்கு அவ்வளவு சாம(ர்)த்தியம் வயாது' என்று தனது அபிப்பிராயத்தை வெகு தய வாய் வெளியிட்டருளினள். வேம்பு , ' சுப்பிரமணியன் யார் வழிக்குப் போறான், எவர் வழிக்குப் போறான் ; அப்பாவி, அவனுண்டு பொன்னம்மா உண்டு , தெய்வ மேன்னு இருக்கான்' என்று நீட்டிச் சொன்னாள். பொன்னம்மா இவ்வளவுக்கும் அங்கேயே இருக் கிறாள். அவளுடைய பொறாமையைத் தூண்ட வேண்டுமென்றுதான் இந்த சம்பாஷணையே அக்கிரா சனாதிபதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. வேம்பு பேசி முடித்தவுடன் பொன்னம்மாள் கம்பீரமாய் விழித்துப் பார்த்துக்கொண்டு 'தலையிருக்க வாலாட ணுமா. ஒரு ஊருக்கு இரண்டு பைத்தியக்காரன் வேணுமான்னு வெறுன்னே இருந்தாக்கா "சுப்பிர மணியனுக்கு ஒன்றும் தெரியாது, அப்பாவி, எல்லாம் அவர் அண்ணாதான் சாதிக்கிறா" என்னு இப்படி யெல்லாம் சொல்லச்சொல்லியிருக்கா! அப்படித்தான் இருக்கட்டுமே, அதிலென்ன எளப்பம். என்ன இருந் தாலும் அவாள் ஆணும் பெண்ணும் கெட்டிக்காரர் தான். நாங்கள் ஆமடையான் பெண்டாட்டியும் பைத்தியக்காரர்தானம்மா! கெட்டிக்காரரில்லாட்டா அம்பதினாயிரத்தோடே லட்சம் சேருமா! என்று வெகு வெறுப்பாய்ச் சொல்லிவிட்டு, வீட்டுக்குப் போக நேரமாய்விட்டபடியால் கட்டிச் சுருட்டிக் I