பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'சரிதான், இதுவும் விசேஷம்தான்' 137 கொண்டு கால் நிமிஷமும் தங்காமல் புறப்பட்டு வீட் டாள். ஊரார் முத்துஸ்வாமியய்யரைக் கொண்டாடக் கொண்டாட அவளுக்குப் பொறாமையதிகரித்தது. மேலே சொல்லியபடி அவள் சுப்பிரமணிய அய்ய ருக்குப் பதில் சொல்லவே அவர் 'வந்துவிட்டானா? இங்கேயேயிரு. நான் போய் என்ன சமாசாரம் என்று கேட்டு வருகிறேன்' என்று புறப்பட, அவள் எல்லாம் போய்த் தானிருக்கு. வரவில்லை வரவில்லையென்று ரொம்ப தாபந்தப்பட்றா ! விழுந்தடிச்சுக்குண்டு இப் பவே ஓடவேண்டாம். சாயங்காலம் வேண்ணா போயிக்கலாம்,' என்று சொல்லி அவரருகிலிருந்து சல்லாபங்கள் செய்து போகாமல் நிறுத்திவிட்டாள். இதற்குள்ளாக முத்துஸ்வாமியய்யரிடம் ஊரார் -அனேகர் போய் பேயாண்டித் தேவனுடைய நடத்தை, அவனைச் சிறைப்படுத்தியது முதலிய விஷ - யங்களைப் பற்றி விசாரிக்க, அவரும் சவிஸ்தாரமாய்ச் சொல்லிக்கொண்டிருந்தார். சாயங்காலம் பொன்னம் மாளுடைய அனுமதியின்மேல் சுப்பிரமணியய்யர் சாவகாசமாய் வந்தார். முத்துஸ்வாமி அய்யர் சுபா வத்தில் கர்வ இஷ்டர். ஊரார் வந்து விசாரிக்கிற போது தன் தம்பி தன்னை முன்னமேயே வந்து விசா ரிக்கவில்லை என்பதைப்பற்றி அவருக்கு அந்தரங்கத் தில் கோபம். ஆகையால் சுப்பிரமணியய்யர் போன பொழுது அவர் அவரை ஒன்றும் கவனிக்கவில்லை. முகங்கொடுத்துப் பேசவில்லை. இவராவது சிறிது மலிந்தாரா? அவருக்கு இவர் தம்பியல்லவோ ! சிறிது நேரம் இருந்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் சட் டென்று அவர் வெளியே போய்விட்டார். அதைக் கவனித்த முத்துஸ்வாமியய்யருக்கு 'இவனுக்காக நாம் இவ்வளவு பாடுபடுகிறது! நம்மை இவன் இவ்வளவு அலட்சியம் பண்ணுகிறதா ! இதுவரையில் இப்படிக் காணோமே. சரிதான், இதுவும் விசேஷந்தான்' என்று