பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



138 கமலாம்பாள் சரித்திரம் மனதில் கோபம் உண்டாயிற்று. சுப்பிரமணியய்யர் வீட்டுக்கு வந்தவுடன் பொன்னம்மாளுடன் நடந்த சங்கதியைச் சொல்ல அவள், 'உங்களுக்கு வேணும் நன்னாவேணும்' என்று சொல்லி முகத்திலிடித்தாள். இந்த அற்ப சங்கதி சகோதரர்களுக்குள் பரஸ்பர அருவருப்புக்குச் சிறிது இடங்கொடுத்தது. சில நாளைக்குப் பிறகு சுப்பிரமணியய்யருடைய கிரகத்துக்கு ஒரு பையன் வந்தான். அவனுடைய நறுக்குமீசையும், குடுமியும், சாந்துப்பொட்டும், கிறுக் குச்சடாவும், அவனுடைய ஷோக் நடையும் அவன் போக்கிரியென்று கட்டியம் கூறின. அவன் குணம் அவனுடைய நடை உடை பாவனைகளில் எழுதிக் கிடந்தது. பின்னும் ஏதாவது சந்தேகமிருக்குமாயின் ஐந்து நிமிஷம் அவனுடன் பேசினால் எல்லாம் நீங்கிப் போகும். துலுக்கு பாஷைதான் அவன் வாயில் விசேஷ சஞ்சாரம். அவனுக்குத்தான் லட்சுமியைக் கொடுக்க வேண்டுமென்று பொன்னம்மாளுடைய அருமையான கோரிக்கை. அவன் அவளுக்கு சொந்தத் தமையன் (பொன்னண்ணா) பிள்ளை. அவனுக்கு வயது 19 அல்லது 20 இருக்கலாம். நாலைந்து வருஷமாக ' மெட்ரிகுலேஷன்' பரீட்சைக்கு தவறாமல் போய்க் கொண்டிருந்தான். இன்னும் பத்துப் பதினைந்து வருஷத்துக்குள் பரீட்சை தேறிவிடும் என்ற பயம் அதிகமாகக் கிடையாது. பணம் மட்டும் தயவு செய்து யாராவது சோம்பலில்லாமல் கொடுத்து வரவேணும். மகாராஜர் சுப்பிரமணிய அய்யரவர்கள் தான் தற் காலத்துக்கு அந்த நல்ல தர்மத்தை நடத்திவரு கிறார்கள். ' எங்கள் வைத்தி ரொம்ப அழகு, அவ னோடே ஒத்தர் பேசிமுடியாது. துலுக்குக்கூடத் தெரியுமடி' என்று பொன்னம்மாள் பலமுறை அவ னுடைய பிரசம்ஸையை வம்பர் மகாசபைக்குத் தெரி யப்படுத்தியிருக்கிறாள். பணத்துக்காவது, அழகுக்