பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நறுக்கு மீசையும் கிறுக்குச் சடாவும் 139 - காவது யாரையாவது விசேஷிக்க வேண்டியிருந்தால் அவள் முறையே தன் பிறந்தகத்தையும், வைத்திய நாதனையும் சொல்லாமலிருக்கமாட்டாள். அவன் பெயர் வைத்தியநாதன். அவன் வந்த அன்று மத்தி யானம் லட்சுமி சிற்றம்மையகத்துக்கு ஏதோ காரிய மாகப் போனாள். அவளைக் கண்டவுடன் பொன்னம் மாள் வைத்தியநாதனைப் பார்த்து 'இவள் தாண் டாப்பா ஒன் பெண்டாட்டி. மதுரையான் அடிச்சுக் குண்டு போயிட்டான்' என்றாள். அதற்கவன் அவள் இப்பொழுதும் என் பெண்டாட்டிதான். எனக்காகப் பேசினவள் என் பெண்டாட்டிதான். மதுரைப் பயல் கிடக்கிறான் நான் - என்றான். லட்சுமிக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. போன காரியத் தைப் பார்த்துக்கொண்டு திரும்ப எத்தனித்தாள். பொன்னம்மாள் , 'என்னடி அவன் அவ்வளவு அருமை யாக உன்னை விசாரிக்கின்றான், நீ அவனை எப்போ வந்தேன்னுகூட விசாரிக்கப்படாதா? வெறுன்னை கேளு, வாய்முத்து உதிந்து போகாது. போனா நானி ருக்கேன் பொறுக்கித்தர' என, அவள் ஒன்றும் சொல் லாமல் தலை குனிந்து வெட்கி நின்றாள். உடனே பொன் னம்மாள் ' அடி அதிசயமே , சீமைச் சரக்கே' என்ன ஓவியம் பண்ணுகிராளடி இந்தக் குட்டிதான். எங்களை யெல்லாம் லட்சியம் பண்ணி நீ பேசுவாயா,' என்று சொல்ல, போக்கிரி வைத்தியநாதன், ' பொண்டாட்டி யல்லவோ , நீ யிருக்கிறபோது பேசுவாளா? நீ அந்தப் பக்கம்போ, பேசுவள்.' கலியாணியைப் பார்த்து 'ஏனடி யப்படித்தானே! என் தங்கமே, லேடி, யங் லேடி , மை டியர் , மை டியர் என்று சொல்லிக் கொண்டு அவளை நோக்கி காமாவேசத்துடன் எழுந்து துரத்திச் சென்றான். லட்சுமியோ உடம்பு நடுங்கி பயந்து தன்னகத்துக்கு அலறிக்கொண்டு ஓடி வந்தாள். அப்பொழுதுதான் அவள் தகப்பனார் தூங்கி யெழுந்த சமயம். ஓடி வருவதைக்கண்டு அவர் என்