பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



140 கமலாம்பாள் சரித்திரம் னடி யென்று கேட்க, ' அவள் ஒன்றுமில்லையப்பா என்றாள். மறுபடியும் அவர் ' தேம்பி அழுகிறாயே சமாசாரம் என்னடி' என்று அழுத்திக் கேட்க, அவள் சங்கதி நடந்ததைச் சொன்னாள். அதற்குள் கமலாம் பாளும் அங்கே வந்தாள். உடனே அவளைப் பார்த்து முத்துஸ்வாமியய்யர், ' உனக்கு ஏதாவது புத்தியிருக் கிறதா? அவளை நீ ஏன் அவர்கள் வீட்டுக்குப் போகச் சொன்னாய்?' என்று கேட்க, அதற்கு கமலாம்பாள் " அற்ப காரியம்தானே இதற்காக நான் போவானேன், போய்விட்டு ஒரு எட்டில் வந்துவிடுவாள் என்று போகச் சொன்னேன். என் மேல் தப்பிதந்தான், நான் சொல்லியிருக்கப்படாது' என்றாள். முத்துஸ்வாமி யய்யர் பெண்ணைப் பார்த்து ' அவள் வீட்டுக்குப் போகிறபோது என்னைக் கேட்டுக் கொண்டா போனாய் போ அந்தப் பக்கம், என்னெதிரே அழாதே போ!' என்று அதட்டிச் சொன்னார். லக்ஷ்மி பாவம் அழுது கொண்டு உள்ளே போய்விட்டாள். அப்பொழுது இரண்டாங் கட்டில் பொன்னு என்ற ஒரு கைம்பெண் தோசைக்கரைத்துக்கொண் டிருந்தாள். அவள் இந்த சங்கதியை யெல்லாம் பொன்னம்மாளிடம் போய் ஒன்றுக்குப் பத்தாய் மூட்டிவிட்டாள். அன்று சாயந்திரம் சுப்பிரமணியய்யரும் வைத் தியநாதனும் ஆற்றங்கரைக்குப் போய்க்கொண்டிருந் தார்கள். அப்பொழுது முத்துஸ்வாமியய்யர் எதிரே வந்தார். வந்தவர் வைத்தியநாதனை எப்பொழுது வந்தாய் என்று கேட்கவில்லை. அவனைக் கண்டவுடன் அவன் அயோக்கியன் என்று அவருக்குப்பட்டது மன்றி மத்தியானம் நடந்த சங்கதியும் ஞாபகத்தில் வந்தது. அவர் இவனுடன் என்ன பேச்சென்று போய்விட்டார். உடனே வைத்தியநாதன் ' என்ன வெகு அசட்டையாய்ப் போகிறாரே' என, சுப்பிரமணி