பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



16 'பலீன் சடு குடு.' சில நாளைக்குப் பிறகு கமலாம்பாளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நெடுநாளாய்ப் புத்திரபாக்கிய மற்ற முத்துஸ்வாமி அய்யருக்குப் பிள்ளைக் குழந்தை பிறந்ததில் உண்டான சந்தோஷத்துக்கு எல்லையில்லை. திடீரென்று கண்பெற்ற பிறவிக் குருடனுக்குக்கூட அவ்வளவு சந்தோஷமிராது. கல்யாண காலத்திலேயே கமலாம்பாள் கர்ப்பவதியாய் இருந்தாள் என்று நமக்குத் தெரியுமே. ஆனால் அவளுக்குப் பெண் குழந்தைகள் பிறப்பதும் இறப்பதும் சகஜமாயிருந் தனவேயன்றி இதுவரையில் ஒரு ஆண் குழந்தையா வது பிறந்துகூட அவள் அறியாள். கன்னிகாதான பலன் கைமேல் சித்தித்ததென்று முத்துஸ்வாமி அய்யர் ஆனந்தித்துக் குழந்தை பிறந்த மறுநாளே சம்பந்தி ராமசுவாமி சாஸ்திரிகளுக்கு இஷ்டமித்ர சஹ பரிவார பந்துஜனங்களுடன் வந்து இருந்து புத்தி ரோற்சவத்தைச் சிறப்பிக்கும்படியாகக் கடிதம் விடுத் தார். அந்தக் கடிதத்தைக் கண்டவுடன் மாப்பிள்ளை ஸ்ரீநிவாசன், ராமசுவாமி சாஸ்திரிகள், கிருஷ்ணய்யர் முதலிய எல்லோரும் சிறுகுளம் வந்து சேர்ந்தார்கள். புண்ணியாக வசனம் கிரமித்த பிறகு ஸ்ரீநிவாசனைச் சிலநாள் இருந்து வரும்படி சொல்லிவிட்டு மற்ற வர்கள் மதுரைக்குப் போய்விட்டார்கள். ஸ்ரீநிவாசன் வரப்போகிறான் என்ற செய்தி கேட் டது முதலே பொன்னம்மாள் மருமகன் வைத்திய நாதன் பொறாமையால் பொங்கிக் கொண்டிருந்தான். அந்தப் பயல் வரட்டும் உண்டு இல்லை யென்று பண்ணிப் போடுகிறேன்' என்று அவன் தனக்குள்