பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அஸ்தமன மஹோத்ஸவம் 143 பலமுறை பிரதிக்ஞை பண்ணிக் கொண்டான். தனக்கு இருந்த துவேஷத்தைத் திருப்தி செய்து கொள்ளுவதற்குச் சீக்கிரத்தில் அவனுக்கு ஒரு நல்ல சமயம் கிடைத்தது. ஒருநாள் சாயங்காலம் குங்கும நதி யென்றும் ஸ்வர்ணபூரணி யென்றும் பெயர் பெற்ற அவ்வூர் ஆற்றங்கரையில் விஸ்தாரமாய்க் கிடந்த வெண்மணலில் நாற்பது ஐம்பது பையன் களாக ' பலீன் சடுகுடு' ஆட்டம் ஆடிக்கொண்டிருந் தார்கள். இங்கிலீஷ் படிப்பு வர வர, நம்முடைய விளையாட்டுகளைக்கூட நாம் மறந்து விட்டோம். சூரி யன் பட்டுப்போல் ஒளி வீசி மறைய, இளவரசுபோல் காத்துக்கொண்டிருக்கும் சந்திரன் அரசாட்சி துவக் கிக் காதல் மயமாய் உலகத்தைக் களிப்பிக்க, நட்சத் திரங்கள் பளீர் பளீர் என்று வெடித்து ஆகாயத்தில் நர்த்தனம் செய்யும் அரம்பை மாதர்களைப்போல் ஆனந்தமாய் விளங்க, வெப்பந்தணிந்து, வானம் பசந்து, குளிர்ச்சி மிகுந்து, தென்றல் வீச, பகவத் பக்தியால் பூரித்த யோகிகள் மனம் போல் சாந்தஸ்வ ரூபமாய் விளங்கும் அந்திப் பொழுதில், வீசுகின்ற தென்றலைப் போலவும், பாடுகின்ற பக்ஷிகளைப் போல வும், தங்களுடைய கவலைகளை மறந்து, பஞ்சுமெத் தைகள் போன்ற மணற் படுக்கைகளின் மீது உல்லாச மாய் ஓடி விளையாடுவதை விட்டு இக்காலத்திய சிறு வர்கள் பலர் பாம்பின் வாயிலகப்பட்ட தவளைகளைப் போல் புஸ்தகங்களுடன் கட்டியழுது பொழுது போக்குகிறார்கள். இது நிற்க, சிறுகுளத்து ஆற்றங்கரையில் அன்று அநேக சிறுவர் கூடி 'பலீன் சடுகுடு ' ஆடிக்கொண் டிருந்தார்கள். வைத்தியநாதன் தன்னுடைய மூர்க்கத் தனத்தினால் அவர்களுக்குள் தலைவனானான். அவன் சேர்ந்திருக்கும் விளையாட்டில் ஸ்ரீநிவாசனுக்குச் சேரச் சற்றும் மனமில்லை. ஆயினும் அவனுடைய