பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



144 கமலாம்பாள் சரித்திரம் நல்ல சினேகிதர்களில் சிலர் அதில் சேர்ந்தமை யாலும், அவனையும் சேரும்படி அவர்கள் கட்டாயம் செய்தமையாலும் அவன் அதில் சேர்ந்தான். மேலும் அவனுக்கு அன்று சாயந்திரம் விளையாட்டில் விசேஷத் திருப்தியிருந்தது. அன்று பகல் முழுவதும் அவன் நன்றாய்ப் படித்திருந்தான். படிப்பை விட்டு வெளியே வந்தபொழுது மதர்த்துத்திரியும் மான் கன்றைப்போல் அங்கு மிங்கும் உல்லாச மாய் ஓடி விளையாட அவனுக்கு ஆசையாயிருந்தது. அன்று அஸ்தமனம் வெகு அழகாயிருந்தது. கூட்டங் கூட்டமாய் மணிகளைச் சப்தம் செய்துகொண்டு மாடுகள் மலையிலிருந்திறங்குவதும், காக்கைகள் கா-கா என்று ஆனந்தக்களிப்புடன் ஆரவாரித்துக் கொண்டு வரிசைக் கிரமமாய் ஆகாயத்தில் பவனி செல்வதும், ஹம் என்று அடங்கிய சப்தத்துடன் வண்டுகள் சுருதி பாடுவதும், கிளிகள் ஆற்றங்கரையி லுள்ள அரசமரங்களில் கொஞ்சிக் குலாவுவதும், நதியின் ஜலம் கலக்குபவரற்று மிருதுவாய் வீணா கானம்போல் ஓடுவதும், அடங்கிய அஸ்தமனத் தென் றலில் மூங்கில் மரங்கள் மயில் போலாடி நயன மொளிப்பதும் கண்ட ஸ்ரீநிவாசனுக்குத் தன்னை யறி யாமல் ஆனந்தம் பெருகிற்று. அவன் நிமிர்ந்து பார்த் தான். அப்பொழுது ஆகாயத்தில் ஓர் அழகான ரோஜா வர்ணம் படர்ந்திருந்தது. சற்று நேரத்திற் கெல்லாம் அந்த வர்ணம் மாறி மிருதுவான நீல நிறம்பரவி மத்தியில் சிற்சில தீவுகளைப் போல மேகங்கள் தங்கியிருந்தன. ஒரே ஒரு நட்சத்திரம் மாத்திரம் உதயமாயிருந்தது. அது சிறிது தூரம் சஞ்சரித்துப் பிறகு மேகத்தில் மறைந்து மறுபடி வெளிப்பட்டு வழி நடந்த தோற்றம் அரணியத்தில் மரங்கள் மத்தியில் மறைந்தும் பிறகு வெளிப்பட்டும் அர்ச்சுனனைத் தேடியலைந்த ஊர்வசியைப் போல இருந்தது. இவ்வித இந்திரஜால வேடிக்கைகள் நிறைந்த அஸ்தமன மகோற்சவமானது வெகு அழ