பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



146 கமலாம்பாள் சரித்திரம் தாரமாகச் சொல்லிவிட்டார்கள். அதற்குள் தன் எதிரியைப் பங்கம் செய்துவிட்ட கர்வ வெறியுடன் வைத்தியநாதன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். வரும் போது லட்சுமி கோயிலுக்கு நெய் விளக்குப் போட்டு விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். அதைப் பார்த்த அந்த முரடன் அவள் மேல் ஒரே மோதாய் மோதிக்கொண்டு போனாள். அவள் உடனே அழுது கொண்டு அகத்துக்கு வந்து அம்மாளிடம் சொன்னாள். சொல்லிக் கொண்டிருக்கும் போதே முத்துஸ்வாமி அய்யர் வீட்டுக்கு வந்துவிட்டார். வந்தவுடன் ஸ்ரீநி வாசனை விளக்கு வெளிச்சத்திற்குக் கூப்பிட்டு அவ னுடம்பைப் பார்க்க எங்கே பார்த்தாலும் காயமும் கீறலுமாயிருந்தது. அவருக்கு மனம் சகிக்கவில்லை. லட்சுமியினிடத்தில் அந்த வைத்தியநாதன் பயல் செய்த அக்கிரமமும் காதுக்கு வந்தது. உடனே கோபாவேசத்துடன் தம்பியையழைத்துவரும்படி ஆள் அனுப்பி வெளியே வந்தார். அப்போழுது சுப்பிர மணியய்யரும் வைத்தியநாதனும் கூடத்தில் உட் கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். முத்துஸ்வாமி அய்யர் கூப்பிடவே சுப்பிரமணியய்யர் வந்தார். முத்துஸ்வாமியய்யர் : (அவரைப்பார்த்து) ' என் னடா சுத்த அக்கிரமக்காரப் பயல்களை யெல்லாம் வீட்டில் வைத்துக்கொண்டு - இது உனக்கு நன்றா யிருக்கிறதா?' என்றார். அவர் பின்னே வந்த வைத்திய நாதன் குகையிலிருந்து பாயும் சிங்கம்போல் பாய்ந்து கொண்டு எதிரே வந்து 'என்ன அக்கிரமத்தைகாணும் வந்து உம்ம நடுவீட்டிலே பண்ணிப் போட்டார்கள். அக்கிரமக்காரப் பயலாம். பேசுகிற கிரமத்தில் பேசும். இல்லையா பல்லு கில்லெல்லாம் போய்விடும்ராமேசுவரத்தைப் பார்க்க ; உஷார்!' என்றதும் முத்துஸ்வாமியய்யர் ' ஏண்டா பயலே என்னடா சொன்னாய்?' என்றார். வைத்தியநாதன் ' அதிகமாகப்