பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கமலாம்பாள் சரித்திரம் | லக் கூச்சலாய் இட, அய்யர் மறுபடியும் கன்னத்தில் மெல்ல அடித்துவிட்டு கையை விட்டுவிட்டார். பில் இரண்டு பேருமாய் அதிக சுறுசுறுப்புடன் பக்ஷணம் களைத் தின்றனர். மனைவி : ' இப்படி பக்ஷணம் தின்று கொண்டிரு தால் நம்முடைய குட்டி கல்யாணிக்கு எப்பொழுது கல்யாணம் செய்கிறது?' அவர் : "யாரே அழகுக்கு அழகு செய்வார்?' அவளே கல்யாணி ஆய்விட்டதே. ' இனி அவளுக்குக் கலியாணம் எதற்கு?" - மனைவி : ' உலகம் புத்தியற்ற உலகம் ; ஆயிரம் ஐந்நூறு என்று செலவழித்துக் கல்யாணங்களைச் செய்து கொண்டு வருகிறார்கள். சுருக்கமாக 'கல் யாணி என்று பெயரை வைத்துவிட்டு இருந்துவிட லாமே. நமக்குத் தெரிந்த இந்தப் பரமரகசியம் ஒரு வருக்கும் தெரியவில்லை பாருங்கள்.' அவர் : ' கல்யாணி எங்கே கண்ணிலேயே காணோம்' என, 'அவள் அடுத்தகத்துக்குப் போயிருந் தாள்,' என்று சொல்லிவிட்டு அந்தம்மாள் 'கல்யாணி' என்றழைத்தாள். அந்தக் குழந்தை ' எங்களண்ணா அழைக்கிறார்கள்' என்று தன் தோழிகளிடத்தில் விடைபெற்றுக்கொண்டு புஸ்தகமும் கையுமாய் வந்து நின்றாள். = 'ஒருகாரியம், "புஸ்தகம் ஹஸ்த பூஷணம் என்ற படி நமது கல்யாணி, அண்ணாவைக் காணும்போதெல் லாம் கையில் புஸ்தகமில்லாமல் இருக்கிறதில்லை' என் றார் அய்யர். அதற்கு அச் சிறுமி 'இல்லை, அண்ணா ! படித்துக்கொண்டுதானிருந்தேன், மீனாட்சியை வேண் டுமானால் கேளுங்கள் அண்ணா' என்றாள். அதற்கு அவர் அவளைப் பரிசோதனை செய்யும் பொருட்டு,