பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



148 கமலாம்பாள் சரித்திரம் மாக அவதூறு செய்தாள். அவள் அவ்விடம் ஆஜரா யிருந்ததை அறிந்த சுப்பிரமணியய்யர் அவ்வளவு கலகத்துக்கும் வைத்தியநாதன் பக்கமாகவே இருந்து பேசினார். முத்துஸ்வாமியய்யருக்கோ தன் ஆயிசு நாளில் அதுவரையில் ஒரு நாளும் நடவாதபடி அன்று நடந்ததைப்பற்றியும் ஒருவராவது தன்னிடத்தில் பேசத்துணியாத பேச்சை அந்த வைத்தியநாதன் பேசினதைப் பற்றியும், தன் தம்பியும் சகோதர விசு வாசத்தை மறந்து அந்தத் துஷ்டப்பயல் பக்கமா யிருந்ததைப் பற்றியும் நினைக்க நினைக்க ஆறாத துக்க மும், கோபமும், மனவருத்தமும் மேலிட்டது. மேலிட் டும் அதை அடக்கிக்கொண்டு ' நாய்வேஷம் போட் டால் குலைக்கவேணும். இவ்வுலகில் வாழ வரம் வாங்கி வந்த பிறகு, முடியவில்லை யென்றால் யார் விடுவார். அந்த உணர்ச்சி முன்னமே இருந்திருக்கவேண்டும்' என்று தன்னையே நொந்து கொண்டு அவ்வளவு அக்கிரமத்துக்கும் இடங்கொடுத்து நடந்த தன் தம்பி யுடன் அன்று முதல் அவர் நெருங்குவதையும் நிறுத்தி விட்டார்.