17 மண்குதிரையை நம்பி ஆற்றிலிறங்கிய கதை மறுநாள் காலமே பேயாண்டித் தேவனுடைய விசாரணைக்காக முத்துஸ்வாமியய்யருக்கும் சுப்பிர மணியய்யருக்கும் 'சம்மன்' வந்தது. அன்றிரவு அஸ்த மித்து ஜாமத்துக்கப்பால் சுப்பிரமணியய்யரும் வைத் தியநாதனும் படுக்கைக்குப் போக இருந்த தருணத் தில் அவர்கள் கிரஹத்திற்குள் கன்னங்கறேலென்று கறுத்துப் பெருத்த உருவமும், கறுத்து வளைந்து காதளவோடிய மீசையும், கருப்பணச்சாமியினுடைய கண்கள் போல் பயங்கரமான பெரிய கண்களும், கையில் இருப்புலக்கை போன்ற ஓர் பெரிய வளைதடி யும் கொண்டு திடீரென்று ஒரு மனிதன் வந்தான், சுப்பிரமணியய்யருக்குத் தூக்க மயக்கம். அவர் நாரா யணா' என்று தன் மனைவி காதில் படும்படி கொட் டாவி விட்டு வாயை மூடுகிற சமயத்தில் மேற் சொல்லிய உருவம் அவர் கண்ணுக்குத் தென்பட்டது. உடனே அவர் திடுக்கிட்டு ' ஐயையோ பேயாண்டி!" என்று உளறிக் கொட்டிக்கொண்டு எழுந்திருக்க, அங்குவந்த மனிதன் அவர் பயத்தைக் கண்டு நகைத் துக்கொண்டு 'சாமி சும்மா இருங்க, நான் தான் அடி யேன் சுப்பாத்தேவன்' என்றான். சுப்பாத்தேவன் என்பவன் பேயாண்டித் தேவனுடைய சிற்றப்பன், சூரத்தேவனுடைய மகன். அவனும் உருவத்திலும் நிறத்திலும் பேயாண்டித் தேவனைப்போலவே கிட்டத் தட்ட இருப்பான். சுப்பிரமணியய்யர் தூக்கமயக்கத் தில் அவனைப் பேயாண்டி என்று எண்ணி அலறி விட்டுப் பிறகு சுப்பாத்தேவன் தான் என்று தெளிந்து சுப்பாத்தேவா , வா வா' என்று உபசரித்தார். அத்
பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/161
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை