பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பரதப்பயல் கள்ளைக் குடுத்து சத்தியம் வாங்கிட்டான் 151 1 யின்னா நினைச்சுக்கிட்டீங்கள். இந்திரன், சந்திரன் குபேரனெல்லாம் அவன்கிட்ட நடுங்கணுமே, கண் ணிலே விரல்விட்டாட்டிவிடமாட்டானா. இருக்கட்டும் நாளை வந்திர்ரான், வந்தப்பரம் கப்பிரமணியய்யர் எங்கே முத்துச்சாமியய்யரெங்கே, பார்ப்பமே. நீங்களும் இருக்கணும் நானும் இருக்கணும் அவ் வளவுதான் அந்தக் கருப்பனை வேண்டிக்கிர்ரது. சுப்பிர 'சுப்பாத்தேவா, சுப்பாத்தேவா, கோபித் துப் பேசாதே. சாதாரணமாக சுபாவத்தில் பேசு அப் பன். நமக்குள்ளே பேசிக்கிறது. கோபிக்கப்படுமா . நாங்களாக முதலிலே வம்புக்குப் போனோமா நீயாச் சொல்லு. திடீரென்று நானாக வலியச் சண்டைக்கு இழுத்திருந்தேன் என்றால் நீ சொல்லுகிறதெல்லாம் சரிதான்.' சுப்பா. - ' ஆமாசாமி நான் ஒத்துக்கிட்டேன். திருடரது எங்க ஜாதித்தொழில்தானே. ஒங்க ஐயா மாருக்கு வேதமோதரது எப்படியோ அப்படி எங்க ளுக்குத் திருடரதுதான் ஜாதித்தொழில். அதுக்காக எங்களை சருக்காருக்குக் காட்டிக்கொடுத்து விடரதா? சுப்பிர.-'இல்லையப்பன் முன்னைப் பின்னை ஏதா வது விரோத முண்டா? திடீரென்று அந்த கோமள நாய்க்கனூரான் சொன்னானென்று வந்து கொள்ளை யிடலாமா ! நீ தான் சொல்லேன். நாங்கள் பெரிதோ , அவன் பெரிதோ, இவ்வளவு யோசனை கூட இல்லா மல்-' சுப்பா. - 'ஆம் சாமி, மாடு போயிருச்சானா என்ன, நகை போயிருச்சானா என்ன! ' பேயாண்டி கொண் டுட்டு வாடா' இன்னா கொணாந்துட்டுப்போரான். குடி மயக்கத்திலே அந்த சமீன் தாருக்கு சத்தியம் குடுத்தாக்க --அந்தப் பரதப்பயல் கள்ளைக்குடுத்து சத்தியம் வாங்கிட்டான் - அதுப்படி செய்யணுமல்ல!