பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சுப்பாத்தேவனாருக்கு அதிதி பிக்ஷை 155 வளவு தூரம் அவனை உபசரித்த காரணம் அவனை எப்படியாவது சாப்பிடும்படி செய்துவிட்டால் அம் புறம் ' உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதில்லை' என்ற அவர்களுடைய ஜாதி சத்தியத்தின்படி அவனால் பிறகு ஒரு கேடும் தங்கள் வீட்டுக்கு வராதென்ற எண்ணமே. கடைசியாய் சுப்பாத்தேவனும் சம்ம தித்து அங்கேயே கொஞ்சம் சாப்பிட்டான். சுப்பிர மணியய்யர் ஆசார உபசாரம் செய்தார். ஒரு யதி பிட்சைகூட அவ்வளவு சம்பிரமமாக ஆசார உ.பசாரத் துடன் நடக்காது. பட்சணங்களும் பண்டங்களும் தாராளமாக சுப்பாத் தேவன் கூட 'போதும் போதும்' என்னும்படி பரிமாறி விருந்திட்டார்கள். சட்டி பானைகளிலுள்ள ஊர்காய் பதார்த்தங்களெல்லாம் சுப்பாத் தேவருடைய வயிற்றுக்கு வந்துவிட்டது. சூத்திரனுக்குப் போட்டால் சேஷம் என்ற விதியெல் லாம் அந்த அவசரத்தில் விலக்கி வைக்கப்பட்டது. கடைசியாய்ப் பால்விட்டு சாதம் போட்டார்கள். சுப்பாத்தேவன் பால் சாதம் சாப்பிடும்போது சுப்பிர மணியய்யரும் பொன்னம்மாளும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் அவன் அந்தச் சாதத்தில் கொஞ்சம் மண்ணைக் கிள்ளிப் போட்டுக்கொண்டு விட்டானானால் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக்கூடாது என்ற சத்தியம் அவனைக் கட்டுப்படுத்தாது. அவன் அந்த வீட்டுக்குத் தாராள மாய்க் கெடுதல் செய்யலாம். இது கள்ளர் சாதிக்கு ஏற்பட்ட மனுஸ்மிருதிகளில் ஒன்று. சுப்பாத்தேவ னார் பிட்சை செய்து போன பிற்பாடு விளக்கணைத்து விட்டுப் பொன்னம்மாள் முதலிய எல்லாரும் படுத்து உறங்கினார்கள். மறுநாட் காலையில் வைத்தியநாதன், பொன்னம் மாள், சுப்பிரமணியய்யர் இம்மூவருக்குமிடையே சம் பாஷணை நடந்தது. அந்த மந்திராலோசனை சபையில்