பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



156 கமலாம்பாள் சரித்திரம் கடைசியாய்த் தீர்மானிக்கப்பட்டது என்னவென்றால், சுப்பிரமணியய்யர் சுப்பாத்தேவன் சொன்னபடியே நகைகள் ஒன்றும் திருட்டுப்போகவில்லையென்றும், மாட்டில் இரண்டு உருப்படிதான் களவு போயிற்று என்றும், வைக்கோற் படப்பைக் கொளுத்தியது பேயாண்டித்தேவனல்லவென்றும் சாட்சி சொல்லி விட வேண்டியது என்பதே. சுப்பிரமணியய்யர் அப்படிச் செய்வது தன் தமயனைக் காட்டிக்கொடுப் பது போலாகுமே என்று நெடுநேரம் அந்தத் தீர் மானத்துக்கிணங்க மனமற்றவராயிருந்தார். ஆனால் 'மத்தளத்துக்கிருபக்கமும் இடி' என்றபடி வைத்திய நாதனும் பொன்னம்மாளும் தங்களுடைய பிடிவாதத் தினாலும் முரட்டுத்தனத்தினாலும் அவரை இரண்டு பக்கமும் மோத அய்யர் அவர்கள் சொன்னபடி. கேட் பதாக ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. வைத்திய நாதனுக்கு இந்த விதத்தில் முத்துஸ்வாமியய்யருக்குப் பெரிய தீங்கு பண்ணிவிடலாமென்று வெகு சந் தோஷம். பேயாண்டித் தேவனுடைய விசாரணை நடந்தது. சுப்பிரமணியய்யர் சுப்பாத் தேவனுக்குத் தந்த உறுதி யைக் கொஞ்சமும் வழுவாது நிறைவேற்றிவிட்டார். நகை போனதற்கு யாதொரு ருசுவும் ஏற்படவில்லை. மாடுகளில் இரண்டு உருப்படிதான் திருடப்பட்ட தென்று ருசுவாயிற்று. வைக்கோற் போரைப் பேயாண்டித்தேவன் தான் கொளுத்தினான் என்பதற்கு யாதொரு முகாந்தரமும் கற்பிக்கப்படவில்லை. கோர்ட் டார் அவனைக் கொடுமையாய்த் தண்டிக்கவேண்டு மென்று நிரம்ப ஆவலுள்ளவர்களாயிருந்தும் ருசுக் குறைவினால் அப்படிச் செய்யக்கூடவில்லை. சுப்பிர மணியருடைய வாக்குமூலம் முத்துஸ்வாமி அய்ய ருக்கு இடிவிழுந்தாற்போல இருந்தது. இவர் இப் படிச் சாட்சி சொல்லுவார் என்று அவர் கனவிலும்