பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'வால்மீகியின்' சாமர்த்தியம் 'ஓராங்கல் படி என்று ஆடிக்கொண்டிருந்தாயே. எனக்குக் கேட்கவில்லையோ?' என, 'இல்லை அண்ணா, நிச்சயமாக வாசித்துக்கொண்டுதான் இருந்தேன்' என் றாள். அவர் 'புஸ்தகத்தை அப்படுயே கொடு; என்று வாங்கி, அது தான் நல்ல பாட்டுகளாய்த் தெரிந் தெடுத்து உரையுடன் சேர்த்துச் செய்த கம்பரர்மா யணச் செய்யுள் திரட்டாயிருக்கக்கண்டு, 'கடைசியில் எந்த இடத்தில் நிறுத்தினாய்?' என்று கேட்க, கல் யாணி , 'சூர்ப்பனகை ராவணனிடத்தில் போய் முறை யிட்டுப் போர் மூட்டுகிற இடம்' என்று சொன்னாள். அய்யர் : (தன் மனைவியைப் பார்த்து) ' ஸ்திரீகள் தான் உலகத்தில் கலகத்திற்கெல்லாம் காரணம். சீதை யில்லாவிட்டால் ராமாயணம் ஏது?' மனைவி : ஆமாம், ஸ்திரீகள் பேரில் ஆசை வைத்துப் புருஷர்கள் கெட்டலைந்தால் அதற்கு ஸ்திரீ கள் தான் காரணம் ; ராவணன் கெட்டது சீதையி னாலேயோ, அல்லது தன் கொழுப்பினாலேயோ?' அவர் : ' அதுபோகட்டும்; இன்னொரு விசேஷம் பார். ராமாயணப்போருக்கு முதல் முதல் காரணமாய் இருந்ததும் பெண், அதை நடுவில் நின்று மூட்டி விட் டதும் பெண் - சூர்ப்பனகை, இல்லையா? இதிலேதான் வால்மீகியின் சாமர்த்தியம் முக்கியமாய் விளங்குகிறது. "நாரதர் கலகப்பிரியர்' என்று சொல்வது வழக்கம்; ஆனால் நாரதர்கூட இவ்வளவு பெரிய யுத்தம் உண்டு பண்ணினதில்லை. இவ்வளவு ஜாலமும் மோசமும் அவர் கனவிலும் கண்டறியார். அவர் யாரிடத்தில் போய் சண்டை மூட்டினாலும் சூர்ப்பனகை ராவண னுக்கு உண்டுபண்ணின் அவ்வளவு கேடு அவர் செய் ததேயில்லை. பத்து நாரதர் சேர்த்தால் ஒரு சூர்ப்ப னகை ஆகாது.' மனைவி : ' அப்படியே இருக்கட்டும். உலகத்தில் புருஷர்கள் எல்லாம் ராவணனையும் கும்பகர்ணனையும்