குழந்தை நடராஜனைக் காணவில்லை 159 - - - தைக் கொடுத்துக் கொண்டிருந்த அக்குழந்தை நாளுக்கு நாள் அழகிலும் புத்தியிலும் வளர்ந்தது. நடராஜன் கொஞ்சம்கூட வேற்று முகம் என்பதில் லாமல் யாரிடத்திலும் பிரியமாய் விளையாடியதால் ஊருக்கெல்லாம் செல்லக்குழந்தையாய் விளங்கினான். அவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது தெருவில் அவசரமாய்ப் போகிறவர்கள்கூட நின்று பார்த்து விட்டுப் போவார்கள். நான் நீ என்று பொன்னம் மாளைத் தவிர மற்றப் பெண்டுகளெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அந்தக் குழந்தையை அவர்களு டைய கிரஹத்துக்கு எடுத்துப்போய்ச் சிற்றுண்டி கொடுத்துச் செல்வம் பாராட்டினார்கள். இப்படி ஊரார் பெருமை பாராட்ட, கமலாம்பாளுக்கு எங்கே திருஷ்டி தோஷம் வந்து விடுமோ என்று குழந்தையை வெளியில் விட பயம் அதிகரித்தது. முத்துஸ்வாமி அய்யருக்கு நிரம்ப சந்தோஷமாயிருக்கும் சமயங்களில் இவ்வளவு அருமையான பாக்கியம் நமக்கு நிலைக்க வேண்டுமே என்ற பயம் வந்து விசனத்தையுண்டு பண்ணும். இவ்விதம் காலம் கழிவது தெரியாமல் இரண்டு வருஷம் சென்றது. இப்படியிருக்க ஒருநாள் திடீரென்று செல்வக் குழந்தை நடராஜனைக் காண வில்லை. அன்று ஆருத்திரா தரிசனம். முத்துஸ்வாமி அய்யர் காலமே ஸ்நானம் செய்து பட்டு வஸ்திரம் தரித்து சுவாமி தரிசனம் செய்யக் கோயிலுக்குச் சென்றார். கமலாம்பாள் லட்சுமிக்கும் நடராஜ னுக்கும் ஸ்நானம் செய்து வைத்து, சர்வா பரணங்களையுமணிந்து சிங்காரித்திருந்தாள். முத்து ஸ்வாமியய்யர் கோயிலிலிருந்து புஷ்பமும், பிரசாத மும் கையுமாய் வந்தவுடன் ' குழந்தை எங்கே' யென்று கேட்டார். கமலாம்பாள் ' குழந்தை வாசலில் குட்டிகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் என்று சொல்லி வீட்டுக்காரியத்தின்மேல் கவனமாயிருந் தாள். முத்துஸ்வாமியய்யர் வாசலில் வந்து பார்த்தார்