இரண்டாம் பாகம். 18 நரபலி. அதற்குள்ளாக சுவாமி எழுந்தருளுவதற்குக் காலம் சமீபித்துவிட்டபடியால் ' சரி இங்கேதான் யாராவது எடுத்துக்கொண்டு, போயிருப்பார்கள், வேறு எங்கே போகப்போகிறான், நான் கோயிலுக்குப் போகிறேன். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு எடுத்துவை' என்று கமலாம்பாளுக்கு உத்தரவு கொடுத்துவிட்டு முத்துஸ்வாமியய்யர் போய்விட்டார். அன்று ஆருத்திரா தரிசனமானபடியால் தெருவெல் லாம் சித்திரக் கோலங்களால் நிரம்பியிருந்தது. வீடு களெல்லாம் மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஸ்திரீயும் தான் தான் ரதி என்று பாவனை பண்ணிக்கொண்டு உல்லாச நடை நடந்தாள். புருஷர்களெல்லாம் ஸ்நானஞ் செய்து பட்டுடுத்தி விபூதீயணிந்து மன்மதாகாரமா யிருந்தார்கள். ஆய்விட்டது, சுவாமி எழுந்தருளுகிற சமயம். மேளக்கார முத்துக்கருப்பன் பம் பம் என்று கோஷம் செய்து தன்னிரு கன்னங்களும் வீங்கத் தனது அபசுரக் களஞ்சியத்தை வெகு தாராளமாய்த் தெரு நிறைய வீசத்துவக்கினான். தவுல்காரச் சின் னண்ணன் அங்கு இருப்பவர்களுடைய காதையும், மத்தளத்தின் தோலையும் ஒரேயடியாக சல்லடைக் கண் மயமாய்த் தொளைக்க ஆரம்பித்தான். தாளக் காரச் செம்பகன் இவர்களிரண்டு பேரையும் லட்சியம் செய்யாது, இருக்கிறவர்கள் தேவையானால் ஈவு வைத்துக்கொள்ளட்டும் என்று உத்தேசம் செய்து பத்து நிமிஷம் இடைவிடாமல் கதறக் கதற அடிக்