பத்திரகாளியம்மன் கோயில் 165 எப்பொழுது எழுந்திருக்கப் போகிறாள் என்று முத்து ஸ்வாமியய்யர் முதலிய எல்லோரும் ஆவலுடன் காத் திருந்தார்கள். பகல் இரண்டு மணிக்கு அவள் சோர்வு தெளிந்து எழுந்திருந்தவுடன் ' குழந்தை நடராஜனை நீ கண்டாயா அம்மா' என்று அவளைக் கேட்க, அவள் சீதாலட்சுமி அம்மாளுடைய கிரஹத்தில் நடராஜனை எடுத்து விளையாடிக்கொண்டிருந்ததாகவும், யாரோ ஒரு சூத்திரச்சி அவளை இங்கே வா வென்று ஆசை காட்டி யழைத்ததாகவும், நெடுநேரம் மதிமயங்கி அவள் கூடவே போக ஒரு காட்டுக்குப் பின்னால் யாரோ பயங்கரமான கோர ரூபத்துடன் சில சூத்தி ரச்சிகள் அவளிடம் வந்து நடராஜனைப் பிடுங்கிக் குதிரையின் மேல் வைத்துக்கொண்டு ஓடியே போய் விட்டதாகவும், தன்னைக் கூட்டிப்போன சூத்திரச் சியும் அவர்களுடனே ஓடிவிட்டதாகவும் தேம்பித் தேம்பி யழுது கொண்டு சொன்னாள். பிறகு அவள் வழி தெரியாமல் தவித்து நெஞ்சும் மாரும் படப்பட என்று அடிக்க, பயந்து அலறிக்கொண்டு கொஞ்ச தூரம் ஓடுவதும், பிறகு பயம் மிஞ்சி கண்ணை மூடிக் கொண்டு அழுதுகொண்டு நிற்பதுமாகக் கடைசியில் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சமாசாரம் வரை சொல்லி முடிக்க, அதைக் கேட்டவர்கள் எல்லாரும் அவளை 'இந்தமட்டிலேயாவது வந்து சேர்ந்தாயே அம்மா' என்று தட்டிக்கொடுத்துத் தேற்றினார்கள். பிறகு திருடர்கள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு எந்தத்திசை நோக்கிப்போனார்கள் என்று விசாரித்துக் கொண்டு எல்லாருமாக குழந்தைப் பறி நடந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். சப் மாஜிஸ் திரேட்டு வைத்தியநாதய்யரும் அவர்களுடன் கூடச் சென்றார். எல்லோருமாக அந்த இடத்திற்குப் போய் பார்க்கும் பொழுது அங்கே இரண்டு மூன்று குதி ரைகள் காலடியும், நாலு வித்தியாசமான மனிதர் களுடைய காலடியும் தென்பட்டன. வைத்திய