பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



174 கமலாம்பாள் சரித்திரம் அவளுக்குத் துக்கம் நெஞ்சடைத்தது. அவள் ' ஐயோ -என் குழந்தை ?' என்று அலறிவிட்டாள். ' நடராஜா, நடராஜா, ராஜா என்று உன்னை செல்வப் பெயரிட் டழைத்தேனே ! ஐயோ! இனிமேல் ராஜா வென்று யாரைக் கூப்பிடப்போகிறேன். அம்மா என்று என்னை ஆறுமாசம் நன்றாக கூப்பிடவில்லையே! உன் னைப் பெற்ற வயிறு நெருப்பாயெரிகிறதே. ஐயையோ இந்தநெருப்பு என்றைக்கு அணையப்போகிறது. ராஜா, நடராஜா! அப்பா கூப்பிடுகிறாரடா, ஏனென்று கேட்க மாட்டாயே! நடராஜா, நடராஜா இதற்குத்தானா உன்னைப் பெற்றெடுத்துப் பெயரிட்டது. உனக்குப் பால் கொடுக்கிறேனடா, வாடா என்னப்பனே ! அப்பா தங்கமே, முத்தே, மணியே உன்னைப் புத்திகெட்டுத் தெருவில் விட்டேனே. இப்படி யெல்லாம் வரு மென்று நான் அறியேனே. உன்னைச் சிங்காரித்து உன்னழகைப் பார்த்து மகிழ்ந்தேனே. என் பாக்கியத் துக்கு எசோதையது கூடக் காணாதென்று இறுமாந் தேனே! சந்திரமதி செத்துப் போன குழந்தையை யாவது மார்போடணைத்துக்கொண்டு அழுதாளே, எனக்கு அதுகூடக் கிடைக்கவில்லையே! கைவேறு கால்வேறு எங்கே புதைத்துக் கிடக்கிறாயோ? சிந்திப் போன உன் எலும்பையாவது உன்னைப் பெற்ற வயிறோடு வைத்து அணைத்துக்கொள்வேனே. நீ போன இடத்துக்கு என்னையும் கூட்டிப் போயிருக்கப் படாதா ! ஐயையோ?- என்று இத்தனை நாழிகை அடக்கிவைத்த துக்கமெல்லாம் கலகம் செய்து கிளம்ப வாய்விட்டுப் பிரலாபித்து அழுதுவிட்டாள். அழுது விட்டு, முகத்தில் துணிபோட்டு விம்மி விம்மி அழுது கொண்டிருந்த முத்துஸ்வாமியய்யரை பார்த்து ' என் புத்திமோசம், அத்தனை சிங்காரம் சிங்காரித்துத் தெருவில் விட்டுவிட்டு அடுப்புக்காரியம் பெரிதென்று இருந்தேனே, என் பெற்றவயிறு கொதிக்கிறதே' என்று சொல்ல, அவர், ' வெளியே போய்வந்தேனே,