பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சந்தோஷத்தில் ஆரம்பித்து விசனத்தில் முடிந்தது 175 நானாவது தேடிப்பிடித்தேனா! எந்தக் காளிக்குப் பலியோ எந்தக் குழியிலே கிடந்து அவன் எலும்பு அழுகுகிறதோ. ஆண்சிங்கமென்று இறுமாந்தேனே. அத்தனை அழகும் குழியிலேயா போய்விட்டது' என்று அவர் அழுதார். இப்படி இருவரும் ஒருவரை யொருவர் கட்டிக்கொண்டு 'ஓ' வென்று இரவு முழுவதும் அழுதுத்தீர்த்தார்கள். இவ்வாறு அன்று இரவு சந்தோஷமாகத் தொடங்கி விசனகரமாக முடிந்தது.